Tuesday, June 28, 2011

யூலை 5, தற்கொடையாளர் நாள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையில் தடைநீக்கிகளாக உயிராயுதமாகி தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து வீரகாவியமாகிவிட்ட தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள் எதிர்வரும் யூலை 5 ல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. 
காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள் பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASS LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
05-07-2011 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முதல் 9:30 வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில் பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம்மோடு வாழ்ந்து, எம்மோடு உறவாடி சிரித்த முகத்தோடு மில்லர், அங்கையற்கன்னி வரிசையில் சரித்திரம் படைத்த தேசப்புயல்களை நெஞ்சில் நிறுத்தி நினைவு கொள்வோம்.
முகம் தெரியா மனிதர்களாய் வாழ்ந்து தமக்கான இலக்கு வரும்வரை காத்திருந்து தமிழர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தம்மை இல்லாதொழித்து ஊமையாய் உறங்கிக்கொண்டிருக்கும் பெரும் சரித்திரம் தமிழர் வரலாற்றின் வீரகாவியம்.
அந்த இரும்பு மனிதர்களின் உடல்களும், உணர்வுகளும் கலந்த காற்றை சுவாசிக்கும் தமிழீழ விடுதலை விரும்பிகளின் இதயம் அவர்களின் பெயர் சொல்லியே துடிக்கும். அது புதியதோர் புரட்சியாய் வெடிக்கும். அந்த வெடிப்பின் நடுவே தமிழீழம் மலரும்.
அன்றைய நாள் தமிழீழ வான் பரப்பில் இந்த தற்கொடையாளர்களான இரும்பு மனிதர்கள் நட்சத்திரங்களாய் மின்னுவர் என்பது உறுதி.
நிகழ்வு நடைபெறும் இடம்:
NORTH MITCHAM ASS LTD
51, Woodland Way,
Mitcham, Surrey,
CR4 2DY
காலம் : 05--07-2011
நேரம் : மாலை 6:30 முதல் 9:30 வரை
மேலதிக விபரங்களுக்கு: 074 0021 9654


இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி தென்னிந்திய நடிகர், நடிகைகள் பேரணி


இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, ராதாரவி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம்.
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம்.
இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.
-நன்றி தமிழ்வின் இணையம்-

Sunday, June 26, 2011

இன்னுயிர் துறந்த ஈழத்தமிழர்களுக்கு நெடுமாறன், சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பழ.நெடுமாறன் எழுச்சி உரை ஆற்றினார். சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.

Saturday, June 25, 2011

'ஜெயசூரியாவை பிரித்தானியாவை விட்டு விரட்டுவோம் - பிரித்தானிய தமிழ் இளைஞர் அமைப்பு


சர்வதேசத்தின் கவனத்தை போர்க்குற்றவாளியாக ஈர்த்துள்ள சிறீலங்காவின் அரசத் தலைவர், மகிந்த ராஜபக்சவின் கட்சியில் அங்கத்தவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ள சிறீலங்கா துடுப்பாட்ட வீரர் "சனத் ஜெயசூரியவை" ....
...இன்று (25-06-2011)  இங்கிலாந்தில் நடைபெறவுள்ள துடுப்பாட்டத்தில் பங்குகொள்ளவிடாது தடுத்து விரட்டுவோம்.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போர்க்குற்றவாளிக்கு துணை நிற்கும் "சனத் ஜெயசூரியவை" துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கும் அதேநேரம், சிறீலங்காவில் இடம்பெற்ற பாரிய இனவழிப்பின் சூத்திரதாரிகளின் முகத்திரையினை கிழித்து அது தொடர்பான விளக்கங்களை சர்வதேச துடுப்பாட்ட சம்மேளனம், மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் விளக்கி அவர்களிடமிருந்து சிறீலங்காவை அன்னியப்படுத்துவோம்.
கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிகள், மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உங்கள் கருத்துக்களையும், எதிர்ப்புக்களையும் உடனடியாக எவ்வித தாமதமுமின்றி தெரியப்படுத்துங்கள்.
Most British Understand the atrocities of Killing Field Regime but not few in Gloucestershire....
Tell them to be human! Tell them Cricket is not fun on others pain!
Stop Killing Field's team enter Bristol Grounds!
Boycott Killing Field's Cricket to promote humanity!
GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB
THE COUNTY GROUND
NEVIL RD
BRISTOL BS7 9EJ
Patron: The Lord Vestey
Chairman: Rex Body
Chief Executive: T E M Richardson
Office Hours:
Monday to Friday from 9am to 5pm and Match days.
Main Reception Telephone: 0117 9108000
Email: reception@glosccc.co.uk
Membership Telephone: 0117 9108017
Email: membership@glosccc.co.uk
Ticketing Office Telephone: 0117 9108010
Email: tickets@glosccc.co.uk
Match information and prospects of play (home matches only)
Telephone: 0117 9108000
Grace room match day bookings Telephone: 0117 9108014
Press Office Telephone: 0117 9108003
Email: pressoffice@glosccc.co.uk
Conference Bookings Telephone: 0117 9108025
Email: conference@glosccc.co.uk
Sales & Marketing
Telephone: 0117 9108013
Email: marketing@glosccc.co.uk
Cricket Office Telephone: 0117 9108015
Email: cricket@glosccc.co.uk
Club Shop Telephone: 0117 9108020
Gold Bond
Telephone: 0117 9108019
Cheltenham Festival Telephone: 01242 851092
Fax numbers All departments except caterers
Fax: 0117 9241193
Gloucs Festival Telephone: 01242 851092
பிரித்தானிய தமிழ் இளைஞர் அமைப்பு   -நன்றி தமிழ் வின் இணையம்-

எமது மண்ணை பறிகொடுக்கப் போகின்றோமா என்பதை இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தீர்மானிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


இதுவரை நடந்த தேர்தல்களைவிட வடக்கு, கிழக்கில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை சர்வதேச சமூகம் உன்னிப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகத் திருமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூலை 23ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, திருகோணமலை பட்டினமும் சூழலும், சேருவில ஆகிய பிரதேசசபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்றது.
இப்பிரதேச சபைகளுக்குப் போட்டியிடும் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி கருத்து வெளியிடுகையிலேயே துரைரெட்ண சிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
துரைரெட்ணசிங்கம் மேலும் பேசுகையில்;
குச்சவெளி பிரதேச சபைக்கு கடைசியாக நடத்தப்பட்ட தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 142 வாக்குகளைக் குறைவாகப் பெற்றதனால் சபையின் நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாமற்போனது. எதிர்வரும் தேர்தலில் முழுமூச்சுடன் உழைத்து குச்சவெளி பிரதேச சபையின் நிர்வாகத்தை தமிழரசுக் கட்சி கைப்பற்ற வேண்டும்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கான தேர்தல் திருகோணமலைத் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைகின்றது. தற்போதைய நிலைவரத்தில் தமிழினத்திற்கு மாற்றான சக்திகளின் மேய்ச்சல் தரையாக திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை பகுதி காணப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இப்பிரதேச சபையின் நிர்வாகத்தை மீண்டும் கைப்பற்றுவதன் மூலமே இது சாத்தியமானதாகும்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவுடன் செயல்பட வேண்டும். தளம்பல் நிலை ஏற்படுவதற்கு இடமளிக்கப்படக்கூடாது. சேருவில பிரதேச சபைக்கான தேர்தலிலும் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்றது.
கடந்த தடவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கட்சி உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார். இம்முறையும் தமிழரசுக் கட்சி அங்கு போட்டியிடுகின்றது.
தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளக்கூடாது. ஆணையாளர் விமர்சித்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் பிரசாரத் துண்டுப் பிரசுரங்களும் கட்சிக் கொள்கைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்படவேண்டும்.
பரம்பரையாக தமிழ் மக்கள் வாழும் தாயகம் துண்டிக்கப்படாது பாதுகாக்கப்படவேண்டும். எம் தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு கொண்ட தீர்வையே தமிழ் மக்கள் இன்று வலியுறுத்தி வருகின்றார்கள்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்கள் இந்த நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதியாக எடுத்துக் கூற வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிறமொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல்லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.

அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இனி நாம் சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கிறீர்கள், விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இதனை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங்கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திருத்தும் வசதிகளும் இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழுமையைப் பெறும்.

திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரணமன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங்களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கருவியில் சேமிக்கவேண்டும் என வன்னிவின்  இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.

அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடையமாகும். தமிழீழத்துக்காகப் போராடும் நாம்.. தமிழுக்காவும் போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே உண்மையாகும் !-நன்றி மனிதன் இணையம்-

GO TO GOOGLE PAGE CLICK
HERE

Friday, June 24, 2011

வெற்றிலைக்கேணிக்கு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள சென்ற குழுவை திருப்பி அனுப்பிய படையினர்!


கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுவது தொடர்பில் பார்வையிடுவதற்காக சென்ற வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உயர்மட்டக்குழுவினரை படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டு,அபிவிருத்திப் பணிகள் செய்வதற்கும் துரிதமான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதும் அங்கு அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை போன்றியுள்ளது.
வடமராட்சி வடக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீளக் குடியமர ஏதுவாக அப்பகுதியில் கட்டடங்கள், பாடசாலைகளைத் திருத்தம் செய்து மீளத் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுவது தொடர்பில் பார்வையிடுவதற்காக சென்ற வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உயர்மட்டக்குழு ஒன்று படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணிப் பகுதிக்குள் இவர்கள் உட்பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
நீண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது பயன்தராததால் பின்னர் அவர்கள் மீளவும் திரும்பி வந்ததாக தொடர்புடைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதே போன்று வலிகாமம் வடக்கிலும் இதே அவலநிலை தோன்றியுள்ளது.-நன்றி நெருடல் இணையம்-

Wednesday, June 22, 2011

வட அயர்லாந்து அரசாங்கம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வ சந்திப்பு


வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், போர்குற்றங்கள் இனப்படுகொலை மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்துறை அமைச்சர் டிலக்சன் மொறிஸ் ஆகியோர் தலைமையில் சென்றடைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினரை, அரச மரியாதையுடன் வட அயர்லாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (யூன்21) வட அயர்லாந்து துணை முதலமைச்சர் Martin Mcguinness தலைமையிலான குழுவினருக்கும், நா.த.அரசாங்க குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
பாராளுமன்ற - துணை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 2மணி நேரம்வரை இடம்பெற்றது.
தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலை, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுப்பு,  ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் ஆகிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதனுடைய சனநாயக நடைமுறைச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துரைத்த அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய சனநாயகவழி போராடத்தின் உயர்பீடமாக அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, வெளிப்படையயை கிடைத்து வருகின்ற உலக நாடுகளின் அங்கீகாரமாகவே இதனைக் கருதுவதாக தெரிவித்தார்.
அமைச்சர் டிலக்சன் மொறிஸ் அவர்கள் கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய நிலைப்பாடு - நிலைவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டு வட அயலர்லாந்து அரச பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுவது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டதோடு, தமிழ் மக்களுடைய சனநாய பொறிமுறையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும் வரவேற்றுள்ளனர்.
வட அயர்லாந்து அரச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களுடனான தொடர் சந்திப்புக்களை நா.த.அரசாங்க உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.-நன்றி நாதம் ஊடக சேவை,நாடுகடந்த தமிழீழ அரசு-

Sunday, June 19, 2011

உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-20) – நிராஜ் டேவிட்


உளவியல் போர் அல்லது உளவியல் நடவடிக்கைகள் ( Psy ops- Psychological Operations அல்லது Psychological War)  என்கின்ற யுத்த நடவடிக்கை பற்றி இந்தத் தொடரில் ஓரளவு விரிவாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர் கட்டுரையில் சர்வதேச மட்டத்தில் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ள டோக்கியோ ரோஸ் ( Tokyo Rose) கனொய் கன்னா (Hanoi Hannah)  பீ.பீ.சி. செய்தி ஊடகம், கெங்கிஸ்கான் மன்னன், மகா அலெக்சாண்டர் (Alexander the Great of Macedonia)  அமெரிக்க இராணுவம் போன்ற தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தோம்.
அதேபோன்று 1ம், 2ம், 3ம் மற்றும் நான்காம் கட்ட ஈழ யுத்தங்களின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றியும் நாம் விரிவாக ஆராய்ந்திருந்தோம். இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு காலத்தில் இந்திய இராணுவமும் அதன் உளவு அமைப்பும் மேற்கொண்ட ஓரிரு உளவியல் நடவடிக்கை பற்றியும் ஆராய்ந்திருந்தோம்.
தற்பொழுது ஒரு முக்கியமான தரப்பின் உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்க்கப் போகின்றோம்.
ஈழத் தமிழர்களையும், அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் குறிவைத்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி நாம் பார்க்க இருக்கின்றோம்.
சிறிலங்கா இராணுவத்தின் திறமையான பக்கங்களை பார்ப்பதற்கு அல்லது ஒப்புக்கொள்வதற்கு எம்மில் சிலர் விரும்புவது கிடையாது. 'சிங்களவர்கள் மொக்கர்கள்" என்று எமக்குள் ஒரு முன்சார்பு நிலையை (pசநதரனiஉந)  வைத்துக்கொண்டு, யாதார்த்தத்தை இலகுவாக கவணிக்கத் தவறிவிடுகின்றோம்.
தமிழர் தரப்பின் மிகப் பெரிய பலவீனம் இது.
சண்டை என்றோ அல்லது போட்டி என்றோ வருகின்ற பொழுது முதலில் எமது பலம் எமக்கும் தெரியவேண்டும். அத்தோடு எமது பலவீனமும் எமக்குத் தெரியவேண்டும். அதேபோன்று எமது எதிரியின் பலமும் பலவீனமும் எமக்கு நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் ஒரு போட்டியில் ஆரோக்கியமாக ஈடுபடமுடியும். வெற்றிக்கனியைப் பறிக்கவும் முடியும்.
ஆனால் எம்மில் சிலருக்கு எமது பலமும் எதிரியின் பலவீனமும் தெரிந்துவிட்டால் போதும் என்ற நினைப்பு மாத்திரமே இருக்கின்றது. எமது பலவீனத்தை மற்றவர்களுக்கு மாத்திரமல்ல தங்களுக்கே மறைத்துவிட விரும்புகின்றார்கள். அதேபோன்று எதிரியின் பலத்தையும் அவர்கள் கணக்கிடத் தவறிவிடுகின்றார்கள். இது தமிழர் தரப்பில் இருக்கின்ற மிகப் பெரிய பலவீனம்.
எம்மில் ஒரு சிலர் நினைப்பது போன்று சிறிலங்கா இராணுவமும் அதனது உளவியல் நடவடிக்கைப் பிரிவும் பலவீனமான அல்லது மடத்தனமான ஒரு தரப்பு அல்ல. அத புத்திசாலிகள் என்கின்ற மமதை கொண்ட தமிழர்களையே கலங்க அடிக்கக்கூடிய திறமை எமது எதிரியின் உளவியல் பிரிவிடம் இருக்கின்றது.
இதனை அவர்கள் அன்மைய வரலாற்றில் நிரூபித்தும் காண்பித்திருக்கின்றார்கள். எனவே எமது எதிரியின் பலம் பற்றி நாம் நன்கு அறிந்து வைத்திருப்பது, எதிர்கால நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எமது எதிரியின் உளவியல் நடவடிக்கைகளின் திறமை பற்றித் தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பது, எதிரி பற்றிய அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவதோடு, அதுவே அவர்களைக் குறிவைத்த ஒரு உளவியல் நடவடிக்கையாக அமைந்துவிடாதா என்கின்ற ஒரு சந்தேகம் எனக்கும் எழுந்தது உண்மைதான்.
ஆனாலும், தமிழர் தரப்பிற்கு உளவியல் நடவடிக்கை பற்றியும் எதிரியின் செயற்பாடுகள் பற்றிய தெளிவையும் வளங்குவதற்கு இதைத் தவிர வேறு வழி எனக்குக் கிடையாது. கூடுமான வரையில் எதிரி பற்றிய தரவுகள் புலம்பெயர் உறவுகளுக்கு ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தாமல் விழிப்புணர்வை மாத்திரம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எழுதுவதற்கு முனைகின்றேன்.
இன்று எதிரியிடம் இருக்கின்ற இராணுவக் கட்டமைப்புகள், அவர்கள் வைத்திருக்கின்ற விமானங்கள், அவர்கள் கைத்திருக்கின்ற பயங்கர ஆயுதங்கள் எம்மை எதுவும் செய்துவிட முடியாது. ஏனென்றால் எமது கருத்துக்களுக்கான மிகப் பெரிய சுதந்திரம் உள்ள மேற்குலக நாடுகளில் நாம் இன்று வாழ்ந்துகொண்டு, செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தின் கொடுர கரங்களுக்குள் சிக்கமுடியாமல் புலம்பெயர் மண்ணில் சுதந்திரமாக அடுத்தகட்டப் போராட்டம் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற புலம் பெயர் தமிழர்களை சிறிலங்காவின் உளவியல் பிரிவு மிக மோசமாகத் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்கின்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
எமது எதிரியின் மிக நுன்ணியமான ஒரு உளவியல் நடவடிக்கைக்கு எம்மை அறியாமலேயே நாம் உள்ளாகிக் கொண்டிருக்கின்றோம். எனவே எமது எதிரி பற்றியும், அவனது உளவியல் நடவடிக்கை பற்றியும் நன்கு அறிந்து செயற்படவேண்டிய காலச் சுழலுக்குள் நாம் இன்று நின்றுகொண்டிருக்கின்றோம்.
அதனால் ஈழ யுத்தங்களின் பொழுது, சிறிலங்கா அரசாங்கமும், அதன் படைத்துறையும் உபயோகித்த சில உளவியல் யுத்தங்கள் பற்றி இந்த வாரமும், அடுத்த சில வாரங்களிலும் ஓரளவு சுரூக்கமாகப்  பார்ப்போம்.

அனைத்து விடயங்களிலும் பிரித்தானியாவின் இராணுவ கட்டமைப்பபை பின்பற்றிவருகின்ற ஸ்ரீலங்காவின் படைத்துறையானது, 1983ம் ஆண்டு ஆரம்பமான ஈழ யுத்தத்தைத் தொடர்ந்தே, இந்த உளவியல் நடவடிக்கை தொடர்பான அவசியத்தை முதன்முதலில் உணர ஆரம்பித்திருந்தது.
கொழும்பில் இருந்து இயங்கிய இரண்டு ஊடகவியலாளர்கள், மற்றும் தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்து இலங்கைப் படையிடம் சரனடைந்த ஒரு நபர் அடங்கலான ஒரு சிறிய பிரிவினரே, ஸ்ரீலங்காவின் உளவியல் யுத்த நடவடிக்கைளுக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்பாக இருந்தார்கள்.
ஸ்ரீலங்கா இராணுவத்தில் பின்னர் தளபதியாக பதவிவகித்த லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பல்லேகல்ல அவர்களே, அப்பொழுது ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தார். அவரது தலைமையின் கீழ், 1984ம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா இராணுவத்தின் இந்த உளவியல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர், வடக்கு-கிழக்கில் ~தமிழீழ கமியூனிஸ கட்சி| என்ற பெயரில் ஒரு இரகசிய வானொலி சேவையை நடாத்தினார்கள். மிகவும் இரகசியமான முறையில் நடாத்தப்பட்ட இந்த வானொலி சேவையானது, இந்தப் பிரிவினருக்கு பல சாதகமான பலன்களைப் பெற்றுத்தந்தது என்றே கூறவேண்டும்.
அந்தக் காலத்தில் வடக்கு கிழக்கில் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்கிவந்த பல தமிழ் போராட்ட அமைப்புக்களிடையே குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதில் இந்த வானொலிசேவை ஓரளவு வெற்றி பெற்றிருந்தது.
தமிழ் இயக்கங்களிடையேயும், இயக்க உறுப்பினர்களிடையேயும் பரிமாறப்பட்ட தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைகளை ஸ்ரீலங்காவின் புலனாய்வுத் துறையினர் கவனமாக ஒட்டுக்கேட்டு, முக்கியமான தகவல்களை இந்த இரகசிய உளவியல் பிரிவினருக்கு அறிவிப்பார்கள்.
இப்படியான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் செய்தி அறிக்கைகளும், நிகழ்ச்சிகளும், தமிழீழ கமியூனிஸக் கட்சியினது வானொலி சேவையில் ஒலிபரப்பப்படும். இந்த வானொலி சேவையில் ஒலிபரப்பப்பட்ட செய்திகளில் அனேகமானவை உண்மையில் நடைபெற்றவையாகவே இருந்ததால், தமிழ் மக்கள் படிப்படியான இந்த வானொலியை நம்ப ஆரம்பித்திருந்தார்கள். இந்த வானொலி சேவையை தமிழ் விடுதலை இயக்கமொன்று இரகசியமாக நடாத்தும் ஒரு சேவை என்றே மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் 1987 ல் வடமாராட்சி மீதான ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கையின் போது, மக்களையும், போராளிகளையும் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு இந்த வானொலி துணை போனதைத் தொடர்ந்துதான், இந்த வானோலி பற்றிய உண்மை தமிழ் மக்களுக்கு விளங்கியது.
அந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக, ஸ்ரீலங்கா இரணுவத்தின் உளவியல் பிரிவினரும், அதன் வானொலி சேவையும் தொடர்ந்து இயங்கமுடியாமல் போயிருந்தது.
சில வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகளுடனான தமது யுத்த நடவடிக்கைகளுக்கு உளவியல் நகர்வுகளினதும் அவசியத்தை உணர்ந்துகொண்ட ஸ்ரீலங்கா இராணுவத் தலைமை, உளவியல் நடவடிக்கைகளுக்கான பணியகம் ( Directorate of Psychological Operation – DPO )  ஒன்றை ஸ்தாபித்தது.
இந்தப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களையும், புலிகள் அமைப்பினரையும் குறிவைத்து, மிகவும் புத்திசாலித்தனமான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை மூலம் ஒலிபரப்பபட்ட, தமிழ் மக்களிடையே மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த மக்கள் குரல் ஒலிபரப்பு, மற்றும் வானம்பாடி ஒலிபரப்பு போன்றன, தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து அன்னியப்படுத்தும் நோக்கத்துடன் நடாத்தப்பட்டன. ( மக்கள் குரல் ஒலிபரப்பானது, அந்த நேரத்தில் ஈ.பி.டி.பி. அமைப்பின் இரண்டாவது தலைவர் என்று கூறப்பட்ட ரமேஷ் என்பவரால் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
மட்டக்களப்பில், இந்த உளவியல் நடவடிக்கைப் பிரிவினர், ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்தே பணியாற்றினார்கள். மட்டக்களப்பு மக்களிடையே வடக்கு கிழக்கு பிரதேச வேறுபாடுகளைத் தூண்டும்படியான பிரசுரங்களை இவர்கள் வெளியிட்டதுடன், சுவரொட்டிகளையும் ஒட்டினார்கள்.
பின்னைய காலகட்டத்தில் அதாவது 2000ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்த உளவியல் நடவடிக்கைப் பணியகத்தின் செயற்பாடுகள், அமெரிக்காவின் விஷேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இதன் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்ரீலங்காப் படைத்துறையினரின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுக்கொள்ளும்படியாக அமைய ஆரம்பித்தன.
அமெரிக்க இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு (US Army Psychological Operation Group) , ஸ்ரீலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பணியகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு பலவிதமான பயிற்சிகளை வழங்கியது.
2000ம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு பயிற்சியின் போது, தமிழ் மக்களிடையேயும், விடுதலைப் புலிகளிடையேயும், உளவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிநவீன நுட்பங்களை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றியும் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த விபரங்கள் பற்றி இராணுவ ஆய்வாளர் தரக்கி சிவராம் North Eastern Herald  என்ற ஆங்கிலப் பத்திரிகைளில் விபரமாக எழுதியிருந்தார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பணியகம் பிரிகேடியர் பி.பண்ணிபிட்டிய என்ற அதிகாரியின் தலைமையின் கீழ் இயங்கிவந்த காலகட்டத்திலேயே அது நவீன வளர்ச்சிகளைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா இராணுவத்தின் மரபுப்போர் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், அதன் உளவியல் போர் நடவடிக்கைகள் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டிருந்தது என்றே கூறவேண்டி உள்ளது.
இவ்வாறு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டிருந்த தனது உளவியல் நடவடிக்கைப் பிரினருடன்தான் சிறிலங்காவின் இராணும் 4ம் கட்ட ஈழத்தைச் சந்தித்தது. வெற்றி கண்டது.
தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு பிரிகேடியர் அருணா வன்னியாராய்ச்சி என்பவர் தலைமையில் இணர்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு செயற்படுகின்றது.
புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்ததான உளவியல் நடவடிக்கைகள் ஜெனரல் சிறிநாத் ராஜபக்ஷ என்பரது தலைமையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவைதான் சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைகள் பற்றிய சுருக்கமான பார்வை.
தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு மேற்கொண்ட சில வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகள் பற்றித் தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

Saturday, June 18, 2011

சிங்கிள் மேனுக்கு பொறக்காத சிங்கள நாய்கள்!



குறிப்பு - இந்த பதிவு எப்போதும்போல் சாதாரண மனநிலையில் எழுதிய பதிவல்ல.. சிங்கள நாய்களின் வெறியாட்டங்களை படம்பிடித்த காணொளிகளை பார்க்க வேண்டாம் என்று இரண்டுநாள் கடத்தி.. நேற்று இரவு அதை பார்த்தேன்.. அதன் வெளிப்பாடுதான் இந்த குமுறல்! இதில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள் இருக்கலாம்.. உங்களுக்கு தவறென்று தோன்றினால் இத்தோடு தவிர்த்துவிட்டு சென்று விடுங்கள்! நான் சொல்வது சரி என்று தோன்றினால் தொடர்ந்து செல்லுங்கள்!



சிங்கள பேடி  நாய்களே! எம் குலப்பெண்கள் வீரத்தோடு போராடும்போது அவள் துப்பாக்கிக்கு பதில் சொல்லதெரியாத பேடிகள்... இறந்துகிடக்கும் என் சகோதரியின் மார்புகளை அறுப்பேன் என்கிறாய்?.. உனக்கு பாலூட்டிய உன் தாயின் மார்புகளை அறுத்து எறிய வேண்டியதுதானே? உயிரோடு இருக்கும் வரை என் சகோதரியின் தலை மயிரை கூட தொட முடியாத நீ?.. அவள் இறந்த பிறகு ஆடை களைந்து பார்க்கிறாய்.. வெட்க்கமாக இல்லை?.. பிணத்தோடு புணர்ச்சி கொள்ளும் ------------- மகன்களா? இது யார் கொடுத்த தைரியம்? உன் ராஜபக்சேயா?.. அவன் மனைவியும் ஒரு நாள் இறப்பாள்.. அவனிடம் சொல்லிவிட்டு அவள் ஆடைகளையும் கலைந்துபார்! அவளுக்கும் அதுதான் இருக்கும்! இன்னும் முனங்கி கொண்டிருக்கிறாள் என்று கேலி பேசும் நாய்களே.. அவள் அப்போது முனங்கியதுகூட வலியால் இருக்காது! வெறி நாய்களின் வேட்டையை தடுக்காமல் செல்கிறோமே என்ற ஆற்றாமையில் இருக்கும்! இறந்து கிடக்கும் பிணங்களில் கூட இவள்தான் அழகு என்கிறாயே? என் சகோதரிகள் அத்தனை பேரும் அழகுதாண்டா! உன் சகோதரி அழகாக இல்லையென்றால் போய் ராஜபக்சேவிடம் கேள்! அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!

 
ஏன்டா ராஜபக்சே நாயே? உனக்கு யார்கொடுத்த தைரியம் இது? வேசியாக பிறக்க வேண்டியவன் ஆண்மகனாய் பிறந்துவிட்டாய்! வேசிதான் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டாள்! அதுபோலதான் நீயும்.. சீனா..பாகிஸ்தான்..இந்தியா.. இப்படி உன் நாட்டின் கற்ப்பை கூறு போட்டு விற்கும் வேசி நீ! இந்த கானோளிகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்? நீ ஏன் சொல்ல வேண்டும்? அதான் உன் அடிமை இந்தியா இருக்கிறதே? இப்போது பார் நான் உன்னை திட்டுவதற்கு கூட இந்திய இறையாண்மைக்கு ஊறு என்று ஏதோ ஒரு அல்லக்கையோ இல்லை கதர்சட்டையோ பாய்ந்துவரும்! பரதேசிகள்.. நீ வீசும் எலும்பு துண்டை நக்குவதற்கு இந்தியாவில் ஆள் இருக்கும்வரை நீ இப்பிடித்தான் எம் பெண்களின் ஆடைகளை களைந்து கொண்டிருப்பாய்.. நீ என் சகோதரிகளின் பாதங்களை நக்கி கழுவும் காலமும் வரும்! கட்டபொம்மன் காலத்தில் இருந்து தமிழனின் சாபக்கேடு காட்டிக்கொடுப்பது! எட்டப்பனில் இருந்து கருணா வரை! அட அல்லக்கைகளா... நான் இலங்கை கருணாவை சொன்னேன்! பெயரில்கூட என்ன ஒற்றுமை?

 
தமிழின தலைவரே! நீங்கள் இந்த காணொளிகளை பார்த்தீர்களா? அதுசரி.. உங்களுக்கு ஏது நேரம்? திஹார் ஜெயிலில் ஒரு பூவை வைத்தால் கூட வாடிவிடும்" இது நீங்கள் சொன்னது! ஊழல் செய்து சிறையில் இருக்கும்போதே இப்படி பேசுகிறீகளே? என் சகோதரிகள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் அப்பனுக்கு பிறந்ததுதான் அவள் தவறா? நானும் நேற்றிலிருந்து பார்க்கிறேன்.. இதைப்பற்றி ஒரு அறிக்கை கூட வரவில்லை.. அது எப்படி வரும்? இதை பற்றி பேசினால் உங்கள் மௌனங்களையும் பேச வேண்டும்! சிங்கள நாய்கள் இப்படி வேட்டையடியதுதான்.. நீங்கள் சொன்ன மழை விட்டும் தூவானம் விடாதா? பார்வைக்கு வந்த தூவானமே இத்தனை என்றால்? பார்வைக்கு வராத கொடுமையெல்லாம் எத்தனையோ? கேவலம் பதவிக்காத்தானே அமைதி காத்தீர்கள்? அந்த பதவியை நாங்கள் பறித்து விட்டோமே? இனியாவது மௌனம் கலைக்க கூடாதா? ஓ ..மத்தியில் இருக்கிறதோ? அட அல்லக்கைகளா.. எல்லோரும் சொம்பு தூக்கிட்டு போங்க ஐயா டெல்லில இருந்து தீர்த்தம் வாங்கி கொடுப்பாரு.. மறக்காம வாங்கிட்டு வாங்க!
அன்னை சோனியாவே! இந்தியாவுக்காக உயிர் துறந்தார் என் புருசன்னு சொல்லியே.. ஒரு இனத்தையே அழிக்க துணை போனதை எப்படி எடுத்துக்கொள்வது? உமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்! தமிழக காங்கிரஸ் தலைவர்கள சொன்னேன்! ஒரு நாளைக்கு ரெண்டு தடவைக்கு மேல உச்சா போனாக்கூட சொல்லிட்டு போற நல்லவர்கள்! இந்த காணோளிக்கும்  பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! உலக நாடுகளே விழித்துக்கொண்டு கண்டிக்கும்பொழுது ராஜபக்சேவுக்கு தடுக்கு தூக்க வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் இந்திய பாதுகாப்பு என்பார்கள்.. 500 இந்திய மீனவர்களை இதே இலங்கைதான் கொன்றது... நீங்கள் எங்களை பாதுகாக்கும் லட்சணம் இதுதான்? அந்த பக்கம்  சீனா அணைகட்டுவதை கண்டிக்க வக்கில்லாமல் நீங்கள் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்! நீங்கள் எதிர்காலத்தில் எங்களை பாதுகாப்பீர்கள் என்று நம்பிக்கை இல்லை! ஆனால் நிழல் காலத்தில் எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள்.. அது போதும்!
கடைசியாக தமிழக முதல்வரே! உங்கள் தீர்மானத்தை வரவேற்கிறோம்.. இருண்டுபோன வாழ்வில் இது ஒரு வெளிச்சப்புள்ளி.. ஆனால் இந்த வெளிச்சத்தையும் காகிரசுடன் கூட்டணி என்ற காற்றை வைத்து அணைத்து விடாதீர்கள்! போர் என்றால் பொது  மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று சொன்னவர்தான் நீங்கள்.. ஆனால் இன்றைக்கு உங்களை நம்பித்தான் ஆகவேண்டும்..வேறு வழியில்லை!  காங்கிரசுடன் கூட்டணி என்று சின்ன ஊசலாட்டம் இருந்தால் தயவுசெய்து அந்த காணொளிகளை பாருங்கள்..பிறகு முடிவெடுங்கள்!

 
ஊழல் செய்த பணத்தில் ஊடகங்கள் வைத்திருந்தால் இப்போது தமிழ் நாட்டில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்! மன சாட்சி இல்லாத மர மண்டைகள்! வட இந்திய ஊடகங்களை பத்தி சொல்லவே வேண்டாம்.. நடிகை உள்ளாடை போடலைனா ஒன்றை பக்கம்.. சமாதில குத்தாட்டம் போட்டா கவர் ஸ்டோரி! ராகுல் காந்தி குடிசைல சாப்ட்டா ஸ்கூப் நியூஸ்! அட பதர்களா? ஹிட்லர் கொன்னாரு.. கொதருனாருன்னு வரலாற படிக்கிறீங்களே? அத ஒருத்தன் அப்பிடியே செய்யிறானே அத ஏன்டா எவனுமே சொல்ல மாட்டேங்கிறிங்க? கருப்பு பணம் வச்சிருக்க பத்திரிக்கைகாரன் கருப்பு பணத்த  மீட்ப்போம்னு நியூஸ் போடறான்! உங்களுக்கும் சகோதரிகள் இருக்காங்கடா.. என் சகோதரிகளின் இந்த கோலத்த பார்த்துட்டு முடிவெடுங்கடா... !

 
இதை பார்த்துட்டு எந்த அல்லக்கை.. கதர்சட்ட வந்து குதிச்சிங்க.. இந்த பதிவுல இல்லாத அசிங்கமான வார்த்தையெல்லாம் சேர்த்து திட்டுவேன்! போங்கடா..போய்.. உன் வீட்ல உள்ள பொம்பள புள்ளைகலாவது பத்தரமா பார்த்துக்கங்க!

படம் உதவி- நன்றி கூகுள்!

Friday, June 17, 2011

முல்லை மண்ணின் அன்னை

முல்லை மண்ணின் அன்னை வற்றாப்பளை அம்பாள் 

Friday, June 10, 2011

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நிறைவேற உங்கள் ஆதரவை பதியுங்கள், நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்

நம் நாட்டின் ஊழலை பற்றி திரும்பவும் இங்கு சொல்ல வேண்டியதில்லை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் குழந்தை பிறந்ததிலிருந்து அவன் சுடுகாடுக்கு போகும் வரை லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் இந்தியாவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஊழலை ஒழிக்கும் என்று வீராவேசமாக பேசினாலும் ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர் மீது அது இதுன்னு சொல்லி ஏதேதோ வழக்குகள் போட்டு அவர்களை படாத பாடு படுத்திடுவாங்க. 
ஹன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் பாபா ராம்தேவ் யோக்கியன் இல்லை என்று அவருக்கும் கோடிகணக்கில் சொத்துக்கள் இருக்கிறது என்று பல பேர் கூறுகிறார்கள் இவை எல்லாம் உண்மையாக இருந்தாலும் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தது இந்த அரசு. இந்த வழக்குகளை ஏன் முன்பே போடவில்லை என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளது. 

இதில் ஹன்னா ஹசாரே கொள்கை ஊளைக்கு எதிரான லோக்பால் மசோதா கொண்டு வருவதே. இதற்க்கு மத்தியரசு சம்மதித்தது போல நடித்தாலும் அவர்கள் இந்த மசோதாவை கொண்டுவருவதில் வேண்டுமென்றே பல பிரச்சினைகளை எழுப்பி காலம் தாழ்த்துகின்றனர். அதில் தற்பொழுது 25 கோடி மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதாவை நிறைவேற்றுவோம் என்று ஒரு கேவலமான நிபந்தனையை நம்ம பாரத பிரதமர் சோனியா காந்தி(Acting Manmoganji) கூறி உள்ளார். 
  1. மக்களின் வரிப்பணத்தை திருடுபவர்களை கண்டிக்க வரும் மசோதாவை மக்கள் எதிர்ப்பார்களா?  
  2. ஹன்னா ஹசாரா உண்ணாவிரதம் இருந்த பொழுது கூடிய கோடானுகோடி மக்களை பார்த்தும் தெரியவில்லையா மக்களின் மனநிலை?
  3. இது உண்மையிலேயே மக்கள் கருத்தை அறியவா இல்லை 25 கோடி மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று இந்த மசோதாவை கிடப்பில் தூக்கி போடவா?
மக்களே மதிய அரசின் இந்த கபட நாடகத்தை நாம் முறியடிக்க வேண்டும். ஆகவே கீழே உள்ள எண்களில் ஏதேனும் ஒரு எண்ணிற்கு உங்கள் போனில்  இருந்து தொடர்பு கொள்ளுங்கள். ஒரு ரிங் அடித்தவுடன் இந்த தொடர்பு தானாக துண்டிக்கப்படும். உங்களின் ஆதரவும் பதிந்து விடும். அதற்க்கு சாட்சியாக உங்கள் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். இப்படி வந்தால் நீங்களும் ஊழலுக்கு எதிரான போரில் நீங்களும் பங்கு பெறுங்கள். 

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
+9122 6155 0789  (அல்லது) 022- 6155 0789.

ஆதரவு தெரிவித்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்

Thanks for registering your support. If you want or volunteer, please log on to www.indiaagainstcorruption.org or send an sms at 09212472681 giving your details.

இதற்க்கு உங்கள் போனில் எந்த வித கட்டனும் பிடிக்கப்பட மாட்டாது. 


நண்பர்களே 25 கோடி பேர் ஆதரவு என்பது மிக அதிகம். நம் நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு. செய்திதாள்கள் படிப்பவர்கள் இந்த அளவு இருப்பார்களா என தெரியவில்லை ஆகவே இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் முதல் உங்களால் முடிந்த அளவு உங்கள் ஊரில் உள்ள அனைவரிடமும் தெரிவியுங்கள். இந்த மசோதாவை அனுமதிக்காமல் காங்கிரஸ் எதாவது சப்பை கட்டு கட்டுவதை தவிர்ப்போம். 

இந்த பதிவை தேவையென்றால் யார் வேண்டுமென்றாலும் காப்பி செய்து கொண்டு அவர்களின் பிலாக்கிலோ அல்லது ஈமெயிலிலோ பரப்புங்கள் 25 கோடி பேர் அல்ல 50 கோடி மக்களின் ஆதரவு இதற்க்கு கிடைக்க நம்மால் முடிந்த அளவு உழைப்போம்.