Friday, June 24, 2011

வெற்றிலைக்கேணிக்கு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள சென்ற குழுவை திருப்பி அனுப்பிய படையினர்!


கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுவது தொடர்பில் பார்வையிடுவதற்காக சென்ற வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உயர்மட்டக்குழுவினரை படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டு,அபிவிருத்திப் பணிகள் செய்வதற்கும் துரிதமான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதும் அங்கு அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை போன்றியுள்ளது.
வடமராட்சி வடக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீளக் குடியமர ஏதுவாக அப்பகுதியில் கட்டடங்கள், பாடசாலைகளைத் திருத்தம் செய்து மீளத் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுவது தொடர்பில் பார்வையிடுவதற்காக சென்ற வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உயர்மட்டக்குழு ஒன்று படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணிப் பகுதிக்குள் இவர்கள் உட்பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
நீண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது பயன்தராததால் பின்னர் அவர்கள் மீளவும் திரும்பி வந்ததாக தொடர்புடைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதே போன்று வலிகாமம் வடக்கிலும் இதே அவலநிலை தோன்றியுள்ளது.-நன்றி நெருடல் இணையம்-

No comments:

Post a Comment