Friday, May 20, 2011

பிரிகேடியர் பால்ராஜ்- 15


குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது. சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத்தளபதியாக இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார்.

சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார்.

No comments:

Post a Comment