| சிங்கள அரசினால் தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் எதிர்வரும் யூலை 23 இல் நடைபெற இருக்கிறது. வட - கிழக்கில் மொத்தம் 25 உள்ளாட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் � (1) வல்வெட்டித்துறை நகர சபை (2) பருத்தித்துறை நகர சபை (3) சாவகச்சேரி நகர சபை (4) காரைநகர் பிரதேச சபை (5) ஊர்காவத்துறை பிரதேச சபை (6) நெடுந்தீவு பிரதேச சபை (7) வேலணை பிரதேச சபை (8) வலிகாமம் மேற்கு பிரதேச சபை (9) வலிகாமம் வடக்கு பிரதேச சபை (10) வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை (11) வலிகாமம் தெற்கு பிரதேச சபை (12) வலிகாமம் கிழக்கு பிரதேச சபை (3) வடமராச்சி தென்மேற்கு பிரதேச சபை (14) பருத்தித்துறை பிரதேச சபை (15) சாவகச்சேரி பிரதேச சபை (16) நல்லூர் பிரதேச சபை. கிளிநொச்சி மாவட்டம் (1) பச்சிலைப்பள்ளி பிரதேச சபை (2) கராச்சி பிரதேச சபை (3) பூநகரி பிரதேச சபை. திருகோணமாலை மாவட்டம் (1) கந்தளாய் பிரதேச சபை (2) குச்சவெளி பிரதேச சபை (3) திருகோணமலை நகர பிரதேச சபை (4) சேருவில பிரதேச சபை அம்பாரை மாவட்டம் (1) காரைதீவு பிரதேச சபை (2) திருக்கோயில் பிரதேச சபை கடந்த மார்ச்சு 17 இல் வட - கிழக்கில் உள்ளாட்சி சபைகளுக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 12 சபைகளிலும் வெற்றிபெற்றது. உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்மக்கள் அடித்தள ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க முடியும். வட - கிழக்கில் நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பலத்த தோல்வியைச் சந்தித்த ஆளும் கட்சி இந்தத் தேர்தலில் தமிழ்க் கைக்கூலிகளின் ஆதரவோடு எப்படியும் வென்றுவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளது. வடக்கில் தேர்தல் பரப்புரைக்குப் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பஸில் இராசபக்சே, நாமல் இராசபக்சே, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், சுசில்பிரேமஜெயந்த, மைத்திரபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, திஸ்ஸ கரலியத்த, ஜகத் புஸ்பகுமார, மஹிந்தானந்த அளுத்கமகே, துணை அமைசர் ஹிஸ்புல்லா ஆகியோருடன் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு (யூலை 03) காலை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பஸில் இராபச்சே "பன்னாட்டுச் சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் எமது அரசுடன் தான் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக நாம் உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார். எனவே வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி ஆட்பலம், பணபலம், அதிகார பலம், இராணுவ பலம் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆளும் சிங்கள - பவுத்த பேரினவாதிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிய தலையிடியாக இருக்கிறது. "அரசைக் குழப்பும் கட்சிகளாக தெற்கில் ஜேவிபியும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்" இருக்கிறதாக அமைச்சர் பஸில் இராசபக்சே குற்றம்சாட்டியுள்ளார். வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்று போர்க்காலத்தில் கூறிய மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் வழங்கும் காணி மற்றும் காவல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். "யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது" என கபே (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது. வடக்கும் கிழக்கும் இராணுவ - சிங்கள - பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள், பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது. அதன் வெளிப்பாடாகவே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூட்டமைப்பை தோற்கடித்து உள்ளாட்சி சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு அதிதீவிர முயற்சி செய்கிறது. யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் கடந்த யூன் 16 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர் ஆயுதங்களோடு திடீரெனப் புகுந்து இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது தெரிந்ததே. யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை இல்லை என்பதற்கு இந்தத் தாக்குதல் சாட்சி பகருகிறது. கடந்த தேர்தல்களில் எமது மக்கள் எதற்கும் விலை போக மாட்டார்கள், எந்தப் பயமுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டார்கள் என்பதைத் துலாம்பரமாகக் காட்டியுள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் எமது மக்கள் சிங்கள - பவத்த இனவாதத்தைக் கக்கும் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் அதன் தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் செமபாடம் புகட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஒரு காலத்தில் சிங்கள - பவுத்த - இராணுவ மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக வி.புலிகள் காப்பரணாக விளங்கினார்கள். இன்று அந்தப் பொறுப்பு ததேகூ இன்தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. முன்னா நடந்த தேர்தல்களில் ததேகூ இன் வெற்றிக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் குறிப்பாக கனடிய தமிழ்மக்கள் பாரிய பங்களிப்பைச் செய்துளார்கள். தொடர்ந்து அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள் என நம்புகிறோம். ததேகூ தோற்கடித்துவிட்டால் தமிழ்மக்களை அடக்கி ஆளுவது எளிதாகிவிடும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு நினைக்கிறது! ததேகூ க்கு எங்கள் ஆதரவு தேவை. �புலம்பெயர் தமிழ்த் தேசிய நலன் விரும்பிகள் |
Friday, July 8, 2011
யூலை 23 உள்ளாட்சித் தேர்தலில் த,தே,கூட்டமைப்பை ஆதரியுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment