முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நாலாம் வட்டார பகுதியில் மீள் குடியேறிய மக்கள்
தமது வீடுகளை துப்பரவு செய்யும் நோக்குடன் பார்வை இட சென்றுள்ளனர்
அப்போது அங்கு அடர்ந்த காடுகள் பற்றிய படி இருந்த வீடுகளை மெதுவாக சுற்றி பார்வையிட்ட போது
பெண்களின் உடைகள் இரத்த கறை படிந்த நிலையில் உருக்குலைந்த எலும்பு கூடுகள் இருப்பது கண்டு
அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இதேபோல அயலவர்களும் இவ்வாறு தமது வீடுகளிற்குள்ளும் ஆண் பெண்கள் உடலங்கள்
இருப்பது கண்டு பிடித்துள்ளனர் .
எலும்பு கூடுகளாய் இருக்கும் அந்த உடலங்களில் ஆடைகளை வைத்தே இவை ஆண் பெண் என அடையாளம் கண்டுள்ளதாக அந்த
மக்களில் சிலர் நமக்கு தெரிவித்துள்ளனர் .
எங்கும் வெடி பொருட்கள் வெற்று குண்டுகளும் வெடிக்காத நிலையில் எறிகணைகள் துப்பாக்கி சன்னங்கள
காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .-நன்றி நெருடல்-

No comments:
Post a Comment