Thursday, August 25, 2011

கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்


கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார். 
மேற்கண்டவாறு தினக்குரல்; பத்திரிகை நிறுவனத்திற்க்கு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில். நேற்று(புதன்கிழமை) காலை 8மணிதொடக்கம் வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வீடுகளிற்க்குள் நுழைந்த படையினர் கிறீஸ் மனிதன் வந்தால் அது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்குத் தெரியப்படுத்துங்கள்,
நீங்களாக அவர்களைப் பிடித்து அடிக்கவேண்டாம். அப்படி எதுவும் நடந்தால் உங்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தினர்.
எமது பகுதியில் நாளுக்கு நாள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவித்தல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
காலை தொடக்கம் ஒவ்வொரு வீடுகளிற்க்கும் சுமார் 5வரையான இராணுவத்தினர் வந்து மேற்படி அறிவித்தலைக் கொடுத்துள்ளனர். இராணுவத்தினர் அறிவித்தல் கொடுத்தபோது எங்களுடைய பாதுகாப்புக்காக நாங்கள் கிறீஸ் மனிதர்களைத் திருப்பித்தாக்கவேண்டும்தானே என சிலர் வினவியதற்க்கு அவ்வாறு சம்பவம் நடந்தால் உடனடியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்படும் என இராணுவத்தினர் பதிலளித்தனர்.
வடமராட்சி கிழக்கில் தாளையடிப்பிரதேசத்தில் மட்டுமே பொலிஸார் உள்ளனர். எனினும் பொலிஸாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே உள்ளது.
இதனால் இராணுவத்தினரின் கட்டுப்பாடு அதிகம் காணப்படுகின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தைத் தோற்று வித்திருக்கின்றது.
இந்நிலையில் உடுத்துறைப் பிரதேசத்தில் நேற்று மாலை 5.45மணியளவில் பிக்கப் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் பூவரசம் மரத்திலிருந்து பொல்லுக்கள் உருவாக்கக்கூடிய தடிகளை வெட்டிச் சென்றதை பிரதேச இளைஞர்கள் சிலர் நேரடியாக கண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள மக்கள் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவ வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

Tuesday, August 23, 2011

தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு!

வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை நேற்று இரவோடு இரவாகப் படையினர் முற்றாக இடித்து அழித்துள்ளனர்.

நேற்றிரவு 10.15 மணியளவில் பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பெக்கோ இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை இடிபாடுகளை அகற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அவ்வீட்டினை பலதடவைகள் படையினரும் இனவாதக்காரர்களும் கட்டம்கட்டமாக சிதைத்து வந்திருக்கும் நிலையில் தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து நேற்றிரவு மேற்படி வீடானது,  இராணுவத்தினரால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் இயக்கப் போராளிகளது மாவீரர் துயிலுமில்லங்களையும் நினைவுத்தூபிகளையும் கட்டம் கட்டமாக அழித்துள்ள இலங்கை அரசு தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனது வீட்டையும் முற்றாக அழித்துள்ளனர்.

முல்லைத்தீவில் பிரபாகரன் பயன்படுத்தினார் என்று கூறப்படும் பங்கரை சிங்களச் சுற்றுலாப் பயணிகளுக்கான மையமாக இராணுவம் மாற்றி உள்ள மையும் குறிப்பிடத்தக்கது.



Saturday, August 20, 2011

முல்லைத்தீவில் இறுதிப்போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்வுக்கு அனுமதியில்லை (வீடியோ இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட சில கிராம அதிகாரி பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சிறிலங்கா அரசின் இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம அதிகாரி பிரிவுகளில் மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக முல்லைத்தீவின் சில பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை கோம்பாவில் என்ற இடத்தில் மீளக்குடியேற்றவுள்ளதாக முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி கூறியிருந்தார்.

கோம்பாவில் பகுதியில் காடுகளை அழித்து தற்காலிக குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. அந்த இடத்தை ஐ.நாவின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினய் நந்தி அண்மையில் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஆனால் இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்ற சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் , போர்க்குற்றங்கள் குறித்த சாட்சியங்களை முற்றாக அழிப்பதற்கே சிறிலங்கா அரசு அங்கு மீள்குடியமர்வுக்கு அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலத்துக்கடியில் புதைந்த போயுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியே வந்து விடுமோ என்ற அச்சத்தினாலேயே சிறிலங்கா அரசு இவ்வாறு செயற்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Wednesday, August 17, 2011

யாழ். குடாநாட்டில் கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை கிளப்பிவிட இராணுவத்தினர் முயற்சி


குடாநாட்டில் கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை கிளப்பிவிட இராணுவத்தினர் முயற்சிப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள மக்கள் நேற்றைய தினம் யாழ்.தென்மராட்சிப் பிரதேசத்தில் கிறிஸ் மனிதன் தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபரப்புச் செய்தமை தொடர்பாகவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேசத்தில் இனம்தெரியாத நபர்கள் சிலர் அங்கு மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களிடம் சென்று அவர்கள் பற்றிய விபரங்களை கோரியுள்ளனர். இந்தத்தகவல் பரபரப்பாக பரவியதையடுத்து இராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடிய இராணுவத்தினர் கிறிஸ் மனிதன் தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்ததுடன் மக்களைப் பாதுகாப்பாக தங்குமாறும் கேட்டுள்ளனர்.
இதனையடுத்தே மீளக்குடியமர்ந்திருந்த முஸ்லிம் மக்கள் இன்னமும் பாதுகாப்பான தங்குமிடங்களை அமைத்துக் கொள்ளாத சூழலில் பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இந்த விடயத்ததை பெரிதாக்கி கிறிஸ் மனிதன் தொடர்பான பீதியை குடாநாட்டில் பரப்பி விட இராணுவத்தினர் முயன்றிருக்கின்றனர். என குற்றம் சாட்டியுள்ள மக்கள் விரைவில் கிறிஸ் மனிதன் குடாநாட்டில் உலவுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tuesday, August 16, 2011

இனி என்ன செய்யப் போகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈழத் தமிழ் மக்களின் பேராதரவான வாக்குகளால் தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
சிறிலங்கா அரசினால் முழு வீச்சாக மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள், கவர்ச்சிகள், சலுகைகள் எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்கள் தங்களுக்குத் தேவை தமிழர் தாயகம், தமிழர் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதனை மீண்டும் ஒரு முறை உலகிற்கு அழுத்தமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
இந்த வெற்றியானது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் அதையும் விட தமிழ்த் தேசியத்துக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகப் பார்க்கப்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கில் 17 உள்ளூராட்சி சபைகளையும், கிழக்கில் 3 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றியதன் மூலம் சிங்கள வல்லாதிக்கம் அல்லது அவர்களோடு இணைந்து இயங்குபவர்களுக்கு சரியான அடியாகவும் அமைந்திருந்தது.
ஆனால் தமிழ் மக்கள் அளித்த வெற்றியின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது தமிழ் மக்களுக்கு தங்களது சொந்த குடும்ப நலன்கள், சுயநலங்கள் எல்லாவற்றையும் துறந்து நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக புரிந்து கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாக குதறப்பட்ட சம்பவத்தினை எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் மறக்காது எம் தமிழினம்.
ஒரு இனத்துக்கு தேசிய அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பதனை தமிழ் மக்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடுகள் எப்படியாக கட்டிக் காக்கப்பட்டது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு எந்தளவுக்கு தமிழர் தாயகப் பிரதேசம் பல்வேறு வழிகளிலும் சிங்களவர்களினால் சிதைக்கப் பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இப்படியாக ஒட்டு மொத்த தமிழினத்தின் கோபம் தான் சிங்கள அரசும் அதன் அருவருடிகளும் தமிழ் மண்ணில் தூக்கிஎறியப்பட்டதன் காரணம்.
போர் முடிவடைந்து தோற்கடிக்கப்பட்ட ஒரு தேசத்தில் எப்படியான அடக்கு முறைகளும் சீரழிவுகளும் சுரண்டல்களும் இடம்பெறுமோ அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் இன்றைய யாழ்ப்பாணம். தமிழ் இளைஞர்களின் போராட்ட குணத்தை, தமிழ் உணர்வுகளை மழுங்கடித்து அதனை முற்றிலும் இல்லாமல் செய்து விடும் தெளிவான நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது சிங்கள அரசு.
இதற்காக தனது அருவருடிகளைப் பயன்படுத்தி இளைய சமுதாயத்தின் உணர்வுகளை அப்படியே அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை சச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது. விலை போன தமிழ்க் கட்சிகளின் கைக்கூலிகள் மூலம் ஆபாசப் படம் காட்டல், விபச்சாரத்தை ஊக்குவித்தல், தாராளமாக போதை மருந்துகளை விநியோகித்தல் போன்ற இழிவான நடவடிக்கைகளின் மூலம் இளைஞர்களின் மனதை திட்டமிட்டு திசை திருப்பி வருகின்றது சிங்கள அரசு.
இதன் இன்னொரு பக்கமாக தமிழ் மக்களின் பாரம்பரியமான கலாச்சார சின்னங்களை அழித்தல் அல்லது உருமாற்றல், தமிழர் தாயகப் பகுதிகளில் பொருளாதார ரீதியாகச் சுரண்டல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதல் போன்ற செயற்பாடுகளையும் சச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது.
இப்படியாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் தலை விரித்தாடும் சிங்களத்துக்கு தமிழ் மக்கள் கொடுத்த பதிலடி தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள். இன்னொரு முக்கியமான விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பு சிங்கள அரசால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தங்களுக்கு உள்ள ஒரே தெரிவாக கூட்டமைப்பை கருதுகிறார்கள். இதனால் பலத்த ஆதரவை இன்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் முக்கியமான ஒரு இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது. இதனால் அவர்களுக்கான பொறுப்புக்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கூட்டமைப்பு இனியாவது தனக்கான பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழர் தாயகப் பிரதேசங்களில் அவர்களை ஒழுங்கு படுத்தும் கட்டமைப்புக்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவற்றை சீரமைக்க கூட்டமைப்பு முழுமையாகப் பாடுபட வேண்டும்.
முக்கியமாக அறிவுஜீவிகள், புலமைசார் திறனாய்வாளர்கள், கல்வியலாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரை உள்வாங்கி தமிழ் மக்களுக்கான அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, கலைக் கொள்கை போன்ற கட்டமைப்புக்களை மீள உருவாக்க வேண்டும். புலம்பெயர் சமூகத்தை தாயகத்துடன் இணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும்.
புலத்தில் உள்ள தமிழ் மக்களின் உதவியுடன் இன்னமும் வன்னிப் பெருநிலப்பரப்பில் சின்னம் சிறு கொட்டகைகளுக்குள் அடைந்து கிடந்தது பல்வேறு உடலியல் உபாதைகள், உளவியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தகரக் கூடாரங்களில் வாழும் மக்களுக்கு பருவ மழைக் காலத்துக்கு முன்னர் ஒழுங்கான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அங்குள்ள மக்கள் முன்னர் வாழ்ந்ததைப் போன்று கௌரவமாக வாழ அவர்கள் வாழும் பிரதேசங்களில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அங்கு வசிக்கும் சிறார்களின் இழந்து போன கல்வியை மீட்டு எடுக்க யாழ் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக யாழ் பல்கலைக் கழக சமூகம் மற்றும் யாழில் கல்வித்தரத்தில் சிறப்பான பாடசாலைகளில் பயிலும் மாணவர்களைக் கொண்டு வன்னிப் பகுதியில் வறுமையினால் பாடசாலை செல்ல வழியின்றி தவிக்கும் மீள்குடியேறிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியறிவுள்ள சமூகமொன்றைக் கட்டமைக்க கூட்டமைப்பு இப்படியான செயற்பாடுகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து மிகப் பிரதானமாக தமிழ் கூட்டமைப்பில் உள்ள வயதானவர்கள் பெருந்தன்மையோடு விலகி துடிப்புள்ள இளைஞர்கள் உள் வர வழி வகை செய்ய வேண்டும். ஏனெனில் இளையவர்கள் தான் முழுவீச்சுடன் கூடுதலான நேரங்களில் மக்களுடன் களத்தில் நின்று பணி புரிவார்கள். கூட்டமைப்பின் பழம் பெரும் தலைவர்கள் ஆலோசகர்கள் என்ற நிலையை வகிக்கலாம்.
கூடுதலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதன் மூலம் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டால் வடக்கு கிழக்கில் அழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளை சபைகளின் மூலம் திறம்பட மேம்படுத்தலாம். இவற்றை விரைந்து மேற்கொள்ள கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்று முக்கியமானது தான். ஆனால் அதனையும் தாண்டி இன்றைய நிலையில் எமது மக்கள் அடிப்படைக் கல்வி, பொருளாதாரத் தேவைகள் மற்றும் உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
மஹிந்தருடன் இணக்க அரசியல் நடத்தி சில்லறைத் தீர்வுகளைப் பெறும் முயற்சியில் வெட்டியாகப் பொழுதைக் கழிக்காமல் மேற்சொன்ன தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். மீண்டும் ஒரு தரம் தமிழ் மக்கள் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் அவர்களை ஏமாற்றாமல் செயற்படுமா கூட்டமைப்பு? இதற்கு இனிவரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Sunday, August 14, 2011

என்றென்றும் வாழ்கவே!!!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்...த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

Thursday, August 11, 2011

மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பான ஊடக அறிக்கை


தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/06/11
 தமிழீழ விடுதலைப் புலிகள்,

 தமிழீழம்.
தாயக விடுதலையே தம் குறிக்கோளாய்க்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரின் வழியில் அணிதிரண்டு களமாடிக் காவியமான எமது வீரமறவர்களை நினைவுகொள்ளும் எழுச்சி நாளே தமிழீழ மாவீரர்நாள் ஆகும்.
உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன எமது மாவீரச் செல்வங்களின் நினைவுநாள் ஆண்டுதோறும் பேரெழுச்சியாக நினைவுகூரப்பட்டு வருகின்றது. உலகத் தமிழர்கள் அனைவரினதும் சிந்தனைகளை ஒரேநேரத்தில் ஒருங்கிணைக்கும் கணமாக மாவீரர் நாளின் வணக்க நிகழ்வு காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது. விடுதலை வேள்வியில் வித்தாகிய எமது கண்மணிகளை தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அஞ்சலிக்கும் இந்நாளே எம்மினத்தின் அதிமுக்கிய நாளாகும்.
காலங்காலமாக பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுவரும் இந்நாள் தற்போது எமது தாயகத்தில் எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், எமது மக்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாதபடி தமக்கான ஆளுமை நிலப்பரப்பை இழந்த நிலையில், எமது மாவீரச் செல்வங்களின் நினைவுநாளைச் சிறப்புற மேற்கொள்ள முடியாமலுள்ளது. இந்நிலையில் எமது மக்கள் புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் மட்டுமே இந்நாளைப் எழுச்சியுடன் நினைவுகூரக் கூடிய நிலை தற்போதுள்ளது. அவ்வகையில் புலம்பெயர் தேசங்களில் நிகழும் மாவீரர்நாள் நிகழ்வுகள் வழமையை விட பேரெழுச்சியாகவும் கூடிய பொறுப்புணர்வுடனும் நிகழ்த்தப்பட வேண்டும்.
எமது மாவீரர்கள் தமிழினத்தின் எழுச்சிக்கும் விடுதலைக்குமான குறியீடாகவே பார்க்கப்படுகிறார்கள். உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாளமுமாக இவர்கள் திகழ்கிறார்கள். உலகத் தமிழினத்தை ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைக்கும் நிகழ்வாகவே இந்த மாவீரர் நாள் அமைகின்றது. அவ்வகையில் வேறெந்த நிகழ்வுக்குமில்லாத சிறப்பியல்பு இந்த மாவீரர் நாளுக்குண்டு.
உலகத் தமிழர்களையும், தமிழினத்தின் விடுதலையின்பால் அக்கறை கொண்டவர்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியாகத் திகழும் இந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள் நிகழ்வு அனைவரையும் உள்வாங்கி நிகழ்த்தப்படும் ஒரு பொதுமைப்பட்ட நிகழ்வாக மேலும் சிறப்பாக நடாத்தவேண்டியது அனைவரினதும் கடமையாகும். தமிழினத்தின் விடுதலையின்பால் அக்கறையோடும் நேர்மையோடும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்க முன்வரும் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாகவும் சமூகத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வுடனும் தமிழ்மக்களால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்வாவே எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தேசிய எழுச்சி நாள் அமையப்பெறுவது சாலச் சிறந்தது.
மாவீரர் நாளென்பது துக்கநாளோ களியாட்ட நிகழ்வோ அன்று. அதேநேரம் இதுவொரு நிதிதிரட்டலையே முக்கிய நோக்காகக் கொண்டு நிகழ்த்தப்படும் நிகழ்வுமன்று. தற்போதுள்ள உலக ஒழுங்கு, எமது மக்களிடத்திலும் எமது போராட்ட நகர்வுகள் தொடர்பிலும் உலகசக்திகளின் எதிர்பார்ப்பு, எமது போராட்ட ஆதரவுச்சக்திகள் எம்மிடம் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும் சனநாயகப்பண்பும் கொண்ட செயற்பாடுகள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு எமது நிகழ்வுகளும் செயற்பாடுகளும், போராட்ட நகர்வுகளும் அமையவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
எனவே வெளிப்படைத் தன்மையுடனும் தற்போதைய சூழலில் மக்களுக்கு நம்பிக்கையேற்படும் வகையிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நிகழத்தப்படவேண்டியது முக்கியமானது. தமிழின நலன்விரும்பிகளையும் விடுதலைச் செயற்பாட்டாளர்களையும் சமூகத்தின் அனைத்து கட்டமைப்புக்களின் உறுப்பினர்களையும் உள்வாங்கி அமைக்கப்படும் ஒரு பொதுவான குழுநிலைச் செயற்பாடு தேசிய நினைவெழுச்சி நாளாம் மாவீரர் நாளில் கடைப்பிடிக்கப்படுவதே ஆரோக்கியமானதாகும்.
அவ்வகையில் மேற்குறிப்பட்ட வழிமுறைகளுக்கு அமைய சில நாடுகளில் பொதுவான மாவீரர்நாள் செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகளில் செயற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய செயற்பாடுகளை நாம் வரவேற்கின்றோம். இவ்வகையான அணுகுமுறையே அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் தொடர்பில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
உன்னத இலட்சியத்துக்காக உயிர்நீத்த எமது மாவீரர்களின் நினைவுநாளே எமது இனத்திற்கான அடையாளமாகக் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அவ்வடையாளம் மூலமே உலகத்தமிழினம் ஒருங்கிணைக்கப்படும். முன்னெப்போதையும் விட பேரெழுச்சியுடன் நினைவுகொள்ளப்பட வேண்டிய இம்மாவீரர்நாளை மக்களனைவருக்கும் பொதுமைப்படுத்தி, கருத்துவேறுபாடுகள், கட்சி வேற்பாடுகள், நிறுவன ரீதியான வேறுபாடுகளைக் கடந்த ஒரு நிகழ்வாக மாற்றி எமது போராட்டப்பயணத்தில் அனைவரையும் ஒன்றுபடுத்தி புதிய பலத்தோடு தொடர்ந்து பயணிப்போம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Wednesday, August 10, 2011

நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர்


இராணுவத்தினர் வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களைக் கைப்பற்றி தம்வசமாக்கும் முயற்சியில் மும்முரமாக செயற்படத் தொடங்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மருதங்கேணி, ஆழியவளை, வெற்றிலைக்கேணி மற்றும் உடுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது கரையோர நிலங்களை சட்டப்படி எழுதித் தருமாறு கேட்ட இராணுவத்தினர், அக்காணி, நிலங்களுக்கு எவ்வளவு பெறுமதி வேண்டுமானாலும் எம்மால் தரமுடியும். ஆனால் எங்களுக்கு அக்காணி நிலங்களை சட்டப்படி எழுதித் தாருங்கள் என கட்டாயப்படுத்தி கேட்டு வருகின்றனர்.
அவ்விடங்களுக்கு சமீபகாலத்தில்தான் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கொட்டில்களிலும், தகரக் குடிசைகளிலும் தம் வாழ்நாட்களை கழித்துவரும் இவ்வேளையில், இராணுவத்தினரின் இப்புதிய முயற்சியால் அப்பிரதேச மக்கள் பீதியில் உள்ளனர்.
காணிகளைக் கொடுக்க மறுத்தால், இராணுவம் என்ன செய்யுமோ என்ற அச்சத்தில் என்ன செய்வதென தெரியாமல் வாழ்கின்றனர்.
கடந்த ஒரிரு வாரமாக ஒவ்வோர் வீடுகளுக்கும் சென்று காணிகளைக் கேட்கும் இராணுவத்தினருக்கு எதிர்வரும் காலங்களில் என்ன பதிலைச் சொல்வதென தெரியாமல் மக்கள் யோசித்தவண்ணமே தம் வாழ்க்கையை கழித்துவருவதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பதினொரு வருடமாக உயர் பாதுகாப்பு வலயமாகத் திகழ்ந்த நாகர்கோவில் கரையோரப் பிரதேசத்திற்கும் அண்மையில்தான் மக்களை மீள்குடியேற இராணுவம் அனுமதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 9, 2011

மட்டுவில் கிழக்கில் இராணுவம் – மக்கள் முறுகல்


மட்டுவில் கிழக்கு தேவாலயத்துக்கு அருகில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் தாக்கியதையடுத்து அந்த இளைஞர் திருப்பித் தாக்கியதால்  களேபரம் ஏற்பட்டது
அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேர்ந்துவிடவே அவர்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் பற்றி முறையிடப்பட்டதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து மக்களைச் சமாதானப்படுத்திச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:
குறித்த படைமுகாமுக்கு ஒரு தொகுதி இராணுவத்தினர் புதிதாக வந்துள்ளனர். இவர்கள் மக்களின் வீடுகளுக்கு குறிப்பாக பெண்கள் தனித்துள்ள வீடுகளுக்கு இரவு வேளைகளில் சென்று சேஷ்டை புரியவும் முற்படுகின்றனர். அத்துடன் வீடுகளில் காணப்படும் சிலபொருள்களை எடுத்துச் சென்றும் விடுகின்றனர்.
சில தினங்கள் முன்னர், தனித்துவாழும் பெண் ஒருவரது வீட்டுக்கு இரவு 1 .00 மணியளவில் சென்று அவரை எழுப்பி மருதாணி இருக்கிறதா என்று கேட்டுச் சிரமப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, வீதியால் செல்பவர்கள் சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு செல்ல முடியாது. மேற்சட்டை இல்லாது செல்ல முடியாது. இரவு 7 மணிக்குப் பின் வீதிகளில் பயணிக்க முடியாது. மைதானங்களில் கூட விளையாட முடியாது என மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
தலைக்கவசம் அணியாது செல்பவர்களை மறித்து தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளனர். நேற்றிரவும் இவ்வாறு இளைஞர் ஒருவர்  தாக்கப்பட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த அவர் திருப்பித் தாக்கி உள்ளார். அதன் விளைவே நேற்றைய சம்பவம்.
இது விடயம் தொடர்பில் நுணாவில் படை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த இடத்தில் வைத்தே சிப்பாய்களுக்கு இரண்டு போடு போட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் என்றார் ஊர்வாசி ஒருவர்.

தமிழீழம் கிடைக்க மகிந்தா உதவி -உருத்திரகுமார் பரபரப்பு பேட்டி


சிங்களம் முள்ளி வாய்க்காலில் வைத்து தமிழ் மக்களை அழித்து பாரிய இன படுகொலையினை மேற்கொண்டது இதன் அடிப்படையில் பல நாடுகள் விடுதலை பெற்றன .புதிய சுதந்திர நாடுகள் பிறந்தன
கொசவோ .கிழக்குத்தீமோர் .தென்சூடான். போன்று நாமும் சுதந்திர தமிழீழ விடுதலையினை பெற்று கொள்ள முடியும் அதை அடுத்து புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போரடவேண்டும் அதேவேளை இலங்கை இனவாத அரசுகள் மேற்கொண்ட பேரழிவினை இன அழிப்பினை உலக நாடுகளிற்கு எடுத்து கூறுவதன் ஊடாகவும் அணைத்து யனநாயக வழிமுறைகள் ஊடாக தீவிரமாக போராடி தமிழீழ அரசினை பெறுவோம் என சூளுரைத்துள்ளார் .
புலம் பெயர் மக்கள் கரங்களில் தமிழீழத்தின் விடியல் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் விரைவாக தமிழர்கள் ஈழம் பெற மகிந்தா தீவிரமாக உதவி செய்து வருவதாக பிரதானமாக நாடு கடந்த தமிழீழ அரசின்பிரதமர் சுட்டி காட்டியுள்ளார்

Monday, August 8, 2011

முல்லைத்தீவில் வீடுகளிற்குள் பெண்கள் சடலங்கள்.


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நாலாம் வட்டார பகுதியில் மீள் குடியேறிய மக்கள் 
தமது வீடுகளை துப்பரவு செய்யும் நோக்குடன் பார்வை இட சென்றுள்ளனர்
அப்போது அங்கு அடர்ந்த காடுகள் பற்றிய படி இருந்த வீடுகளை மெதுவாக சுற்றி பார்வையிட்ட போது
பெண்களின் உடைகள் இரத்த கறை படிந்த நிலையில் உருக்குலைந்த  எலும்பு கூடுகள் இருப்பது கண்டு 
அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
 
இதேபோல அயலவர்களும் இவ்வாறு தமது வீடுகளிற்குள்ளும் ஆண் பெண்கள் உடலங்கள் 
இருப்பது கண்டு பிடித்துள்ளனர்  .
 
எலும்பு கூடுகளாய்  இருக்கும் அந்த உடலங்களில் ஆடைகளை வைத்தே இவை ஆண்  பெண் என அடையாளம்  கண்டுள்ளதாக அந்த
மக்களில் சிலர் நமக்கு தெரிவித்துள்ளனர் .
 
எங்கும் வெடி பொருட்கள் வெற்று குண்டுகளும் வெடிக்காத நிலையில் எறிகணைகள் துப்பாக்கி சன்னங்கள 
காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .-நன்றி நெருடல்-

Sunday, August 7, 2011

தமிழீழத்தின் முக்கிய தலைவர்கள்.

இறுதிப்போரின் போது நயவஞ்சமாக,கோளைதனமாக கொல்லப்பட்ட எம் அரசியற்துறை பொறுப்பாளர் பா.நடேசன்.மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் சி.புலித்தேவன்.

இவர்கள் சிங்களப்படைகளால் சித்திரவதை செய்யப்பட்டும் தீயால் சுடப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.

கொக்குளாயில் படையினரால்தாக்கப்பட்ட இளைஞன் மருத்துவமனையில்


முல்லைத்தீவு கொக்குளாய் கருநாட்டுக்கேணிப்பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய இளைஞன்ஒருவன் சிறீலங்காப்படையினரால் தாக்கப்பட்டு முள்ளியவளைமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கருநாட்டுக்கேணிப்பகுதியில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்குள்ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு சென்ற சிறீலங்காப்படையினர் கூடிநின்ற மக்களை அடித்துவிரட்டியுள்ளார்கள்.குறிப்பிட்டஇளைஞனை படையினர் பிடித்துசென்று கடுமையான முறையில்தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.அதன்பின்னர் வீட்டிற்கு வந்தஇளைஞன் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் முள்ளியவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் 22 அகவையுடைய மார்கண்டு ஜெயானந்தன் என்ற இளைஞனே படையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.கொக்குளாய் பகுதியில் பெருமளவான சிங்கள மக்கள் குடியேறியுள்ள நிலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு பின்பு தற்போது குடியேறியுள்ள தமிழ்மக்களை அடக்கிஆளும்நிலையில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லை. புதுக்குடியிருப்பில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்களுடன் பெரும் புதைகுழிகள் கண்டுபிடிப்பு


பெருமளவிலான மனித எச்சங்களோடு பெரும் புதைகுழிகள் வன்னி புதுக்குடியிருப்பு பகுதியில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான தற்காலிக வாழ்விடங்களை அமைக்கும் போது கண்டுபிடித்துள்ளனர்.
இதைவிட இன்னும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த மனித எச்சங்கள் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட ஆக்கிரமிப்பு போரின்போது சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களினுடையதாக இருக்கலாம் என்று அப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்களப் படைகளால் துப்பரவு செய்யப்பட்ட பகுதியாகவுள்ள, முற்றாக வெடிபொருட்கள் அகற்றப்படாத நிலையிலுள்ள, மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ள அந்தப் பகுதியிலேயே மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது-நன்றி தமிழ்வின் இணையதளம்-

Saturday, August 6, 2011

இலங்கை அரசினால் அழிக்கப்பட்ட ஒரு அழகிய சம்பூர் தமிழ் கிராமத்தின் உண்மைக் கதை



இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய தமிழ்க்கிராமமே சம்பூராகும். அனைத்து விதமான வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தமையினாலேயே சம்பூரணம் என்னும் பெயர் மருவி சம்பூர் என ஆகியதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.
சம்பூரின் அமைவிடமும் குடித்தொகையும்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய தமிழ்க்கிராமமே சம்பூராகும். அனைத்து விதமான வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தமையினாலேயே சம்பூரணம் என்னும் பெயர் மருவி சம்பூர் என ஆகியதாக முன்னோர்கள் கூறுகின்றனர். இப்பெயர் இலங்கை அரசினால் தற்போது உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனம் செய்யப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் இளக்கந்தை ஆகிய ஐந்து பாரம்பரிய தமிழ்க்கிராமங்கள் அடங்குகின்றன. மூதூர் பிரதேச செயலகத்தின் 2008 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி இப்பிரதேசத்தில் 1940 குடும்பங்களைச்சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்தனர்.
இனப்பிரச்சினையும் சம்பூரும்
இனப்பிரச்சினை ஆரம்பமான காலப்பகுதியில் சம்பூர் தனித்தமிழ் பிரதேசமாகக் காணப்படமையினால் போராட்ட இயக்கங்களின் நடமாட்டம் காணப்பட்டமை ஒன்றும் இரகசியமானதல்ல. இதனால் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், வீடெரிப்புக்கள் என பல்வேறு விதமான தாக்கங்களுக்கு சம்பூர் பிரதேசம் உட்பட்டு வந்தது. பெயருக்கேற்ற சம்பூரணமான வளங்களைக் கொண்ட இப்பிரதேசம் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து பொருளாதார ரீதியாகவும் கல்வியிலும்; மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போதிலும் அனைத்திலும் தன்னிறைவான பிரதேசமாகவே இயங்கிக் கொண்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் முதன் முதலில் சம்பூரில் முகாம் அமைக்க முனைந்த போதிலும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் காரணமாக அவர்கள் சம்பூரை விட்டு இடைநடுவில் வெளியேற வேண்டியேற்பட்டது. 1990 களில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் சம்பூர் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் மாறி மாறி இருந்து வந்தது. மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டிருந்தமையினால் இராணுவம் ஊருக்குள் வரும் போது புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கும் மரபினைக் கொண்டிருந்தனர். சம்பூரில் அமைந்திருந்த இலங்கை இராணுவ முகாம்கள் மீது புலிகள் ஒரு போதும் பெருமெடுப்பிலான தாக்குதலைத் தொடுத்திருக்கவில்லை என்பதிருந்தும் இராணுவம் சம்பூரை நோக்கி முன்னேறிய போதெல்லாம் ஒரு தரமேனும் புலிகள் இராணுவத்தினரை எதிர்த்து மரபு வழிச் சமரில் ஈடுபடவில்லை என்பதிலிருந்தும் சம்பூர் பிரதேசம் ஒருபோதும் புலிகளின் கோட்டையாக இருக்கவில்லை என்பது புலனாகின்றது. கடைசியாக சம்பூரில் இருந்த இலங்கை இராணுவ முகாம் ஜயசிக்குறு நடவடிக்கைக் காலத்திலேயே அகற்றப்பட்டது. கடைசியாக நடந்த சண்டையிலும் புலிகள் சாதாரண எதிர்ப்பைக் காட்டிவிட்டு சம்பூரிலிருந்து பின்வாங்கியிருந்தனர் என்பதே உண்மையானதாகும். உண்மையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட சம்பூர் பிரதேச நில அமைவானது புலிகளுக்கு மரபு வழிச்சமருக்கான ஒரு இயற்கையான பாதுகாப்பு நிலைமையை; வழங்கியிருக்கவில்லை. பல கால கட்டங்களில் இராணுவம் சம்பூரை விட்டு வெளியேறியவுடன் புலிகளின் நடமாட்டம் சம்பூரில் அதிகரித்தது என்பதே உண்மையானதாகும். எனவே சம்பூர் புலிகளின் கோட்டை எனும் ரீதியில் சம்பூர் மக்களைப் பழிவாங்குவது எவ்விதத்திலும் நியாமாகாது.
யுத்த நிறுத்தமும் சம்பூரும்
2001 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நிலைமை முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தினை எடுத்தது. யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் சம்பூர் பிரதேசத்தில் அவர்களின் திருமலை மாவட்ட தலைமை பொலிஸ் நிலையம், திருமலை மாவட்ட அரசியல் தலைமைச் செயலகம் என்பவற்றை அமைத்தனர். இலங்கை அரசியல் வாதிகளும்; வெளிநாட்டுத் தூதுவர்களும் அடிக்கடி வந்து சென்றமையினால்; உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அறியப்பட்ட ஒரு பிரதேசமாக சம்பூர் மாறத்தொடங்கியது. தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துபற்றி சம்பூர் மக்களில் பெரும்பாலானோர் அப்போது அறிந்திருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டிலிருந்து யுத்தத்திற்கு மத்தியிலும் நெருக்கடிகளுடன் ஓரளவு சந்தோசமாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர். யுத்த காலத்திலும் மூதூர் பிரதேசத்திற்கு அவர்கள் நெல், மீன், விறகு, பால் போன்றவற்றைத் தாராளமாக வழங்கி வந்தனர்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களின் மீது தற்கொலைத் தாக்குதல் 2006 ஏப்ரல் 25 ஆந் திகதி மாதத்தில் கொழும்பில் நிகழ்த்தப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. ஏனெனில் திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமிக்க பகுதியில் அமைந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகக் காணப்பட்டமையினால் சம்பூர் மீதே முதன்முதலாக வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு வெற்றிலைக்கேணியில் இலங்கைக் கடற்படையினர் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் கெப்பிட்டிக்கொலாவையில் சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் சம்பூர் பிரதேசம் மீதே இலங்கை விமானப்படை தாக்குதலைத் தொடுத்தது. இதன்பிறகு மாவிலாறு பிரச்சினையினைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்து முதன் முதலாக சம்பூர் பிரதேசத்தினையையே கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சம்பூர் மக்களின் இடம்பெயர்வு வாழ்க்கை ஆரம்பமாகியது.
இராணுவம் சம்பூரைக் கைப்பற்றியபோது சம்பூர் எப்படி இருந்தது
சம்பூர் மீது விமானத்தாக்குதல் ஆரம்பமான போது மக்கள் உடுத்த உடையுடன் அயற்கிராமங்களில் தஞ்சமடைந்தனர். யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தமையினால் தாக்குதல் தற்காலிகமானது எனவும் தாம் விரைவில் வீடு திரும்பிவிடலாம் என மக்கள் நம்பினர். ஆனால் அவர்களின் நினைப்பு பொய்த்துப்போனது. தாம் ஆண்டாண்டு காலமாக சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் வீடுகளுடன் விட்டுவிட்டு கையில் எடுக்கக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு இடம் பெயர்ந்த மக்கள் இன்று எல்லாவற்றையும் இழந்து விட்டு ஏதிலிகாக நிற்கின்றனர்.
சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர் குழுவொன்றினை சம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தனர். நேசன் வாரப் பத்திரிகையின் பத்திரிகையாளரான தரிஸ பஸ்தியன் 10.09.2006 அன்று வெளியான நேசன் பத்திரிகையில் “சம்பூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புக்களுக்கு அப்பால் பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சிவிலியன் உடமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிகக் குறைவானதாகும்” தான் அன்று கண்ட சம்பூர் பற்றி எழுதியுள்ளார். ஆனால் அன்று அவர் கண்ட சம்பூரில் இருந்த எதுவுமே இன்று இல்லை. சம்பூரில் இருந்த மக்களின் வீடுகள் மட்டுமல்ல அரசாங்க வைத்தியசாலை கூட இருந்த அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்போது சம்பூரில் நிலை கொண்டிருந்த 222 அல்லை – கந்தளாய் பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாகிய லெப்டினன்ட கேர்ணல் சரத் விஜேசிங்க சம்பூர்ப்பிரதேசத்தில் பல பொலிஸ் காவல் நிலைகள்; அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இவை யாவும் காலப்போக்கில் முழு அளவில் தொழிற்படும் பொலிஸ் நிலையமாகத் தரமுயர்த்தப்படும் என்றும் இவை விரைவில் ஆரம்பமாகவிருக்கும் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான முன்னோடி நடவடிக்கைகள் எனத் தன்னிடம் கூறியதாகவும் தரிஸ பஸ்தியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் மக்களின் மீள்குடியேற்றம் மட்டும் இன்னும் இடம்பெறவில்லை.
அனல் மின் நிலையம், பாதுகாப்பு வலயம், மற்றும் பாரக்கைத்தொழில் வலயம்
சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இச்செய்தி வெளியாகி சிறிது காலத்தில் சம்பூர் பிரதேசம் முழுவதும் மக்கள் உட்செல்லமுடியாத உயர் பாதுகாப்பு வலயம் என வர்த்மானி அறிவித்தலை அரசு வெளியிட்டது. அண்மையில் உயர்பாதுகாப்பு வலயம் என்பது நாட்டில் எங்கும் இல்லை என அரசு அறிவித்த சிலநாட்களில் சம்பூர் பாரக் கைத்தொழில் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பூரை மக்களுக்கு ஒருபோதும் கையளிப்பதில்லை என்னும் முடிவில் அரசாங்கம் உறுதியாக இருப்பதுபோல் தோன்றுகின்றது.
உண்மையில் சம்பூர் விடயத்தில் நடப்பது என்ன? 2009 ஆகஸ்ட் 30 ஆந்திகதி ராவய சிங்கள பத்திரிகையில் தனுஜ பத்திரன அவர்கள் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக சம்பூரில் 500 ஏக்கர் பரப்பளவான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்ட்டிருந்த சுமார் 500 வீடுகளை அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வித அறிவித்தல்களுமின்றி அவர்களுடைய எழுத்து மூலமான எவ்வித அனுமதியும் பெறாமல் இலங்கை அரசாங்கம் தரைமட்டமாக்கியுள்ளது எனவும் அந்த அனல் மின்நிலையம் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட சம்பூர் பிரதேசமானது மக்கள் வாழ்வற்ற சூன்யப் பிரதேசமென இந்தியப் பிரதிநிதிகளுக்கு காரணம் காட்டவே அரசாங்கம் இவ்வாறு தமிழ் மக்களின் வாழ்விடத்தை நாசப்படுத்தியுள்ளது எனவும் இது தொடர்பாக மின்சக்தி அமைச்சு அதிகாரிகளை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த வீடுகள் தமது அமைச்சினால் தரைமட்டமாக்கப்படவில்லை என்றும் அது அரசாங்கத்தின் பிறிதொரு தரப்பினரால் செயப்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அபிவிருத்தித் திட்டமொன்னிற்கு நிலக்கையகப்படுத்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் சட்டவிதிமுறைகளை இலங்கை அரசாங்கமே அப்பட்டமாக மீறி சம்பூர் மக்கள் மீது அட்டூழியம் புரிந்துள்ளமை தெளிவாகின்றது.
ஒரு அபிவிருத்தித்திட்டம் செயற்படுத்தப்படும்; போது கடைப்பிடிக்கப்படவேண்டிய எந்த நடைமுறைகளும் சம்பூர் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. அபிவிருத்தித்திட்டத்தினால் ஏற்படக்கூடிய செலவு நலனைக் கண்டறியும் ஆய்வு, சூழல் பாதிப்பு ஆய்வு, சமூகப் பாதிப்பு ஆய்வு, என எதுவும் சம்பூர் விடயத்தில் பின்பற்றப்படவில்லை. அத்துடன் இலங்கை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலக்கையகப்படுத்தல் நடைமுறைகள் எதுவும் இன்றுவரை பின்பற்றப்படவில்லை. ஏன் அரசாங்கம் இன்றுவரை அம்மக்களுடன் இது தொடர்பில் பேசவேயில்லை. கிழக்கு மாகாண ஆளனரும் திருமலை மாவட்ட அரசாங்க அதிபரும் இனி மக்கள் அங்கு குடியேற முடியாது எனக்கூறுகின்றனரே தவிர அரசாங்கம் அரசியல் ரீதியாக முறைப்படி அம்மக்களுடன் பேசவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட இப்பிரச்சினையில் ஒரு நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கின்றார். சுமார் பத்தாயிரம் ஏக்கர் சதுர பரப்பளவான முறையான உறுதிகளைக் கொண்டுள்ள தனியார் நிலத்தினை அரசாங்கம் சட்டநடைமுறைகளை மீறி கையகப்படுத்த முடியாது என்பதனை சாதாரண அறிவுடையோர் கூட அறிவர். மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு மூதூர்ப் பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கர் நெற்காணிகள் கூட இல்லாத நிலையில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவிலான நெற்காணிகளுக்கு எவ்வாறு மாற்றுக்காணிகளை வழங்குவது?. சுமார் 2500 ஏக்கர் பரப்பளவிலான நெற்காணிகள் சம்பூர் பிரதேசத்தில் இன்றுவரை செய்கை பண்ணப்படாமல் தரிசு நிலங்களாகக் ஆகிக் கொண்டிருக்கின்றன. வளமாக வாழ்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம்; மக்கள் இன்று ஏதிலிகளாக முகாம்களில் அல்லலுறுகின்றனர்
இப்பிரதேசத்தில் சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீpமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம், முதலிய பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்கமுடியாத நிலையில் செயலிழந்துள்ளன. சம்பூர் மகாவித்தியாலயத்தில் இலங்கை இராணுவத்தின் முகாமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் பிரசித்தி பெற்ற சம்பூர் ஸ்ரீpபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் விநாயகர் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம் (இவ்வாலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது), கூனித்தீவு விநாயகர் ஆலயம், கூனித்தீவு வடபத்திர காளி அம்பாள் ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம் முதலிய கோயில்களும் வருடக்கணக்காக பூசைகள் எதுவுமின்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன. பிரசித்தி பெற்ற சம்பூர் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம் குண்டுத் தாக்குதல்களால் முற்றாகச் சேதமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். சுதந்திர இலங்கையில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுக் காணி, சுமார் எட்டாயிரம் மக்களின் வாழ்வு, ஐந்து பாடசாலைகள், ஏழு கோயில்கள் யாவற்றையும் அழித்து எங்காவது ஒரு அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உரியவர்கள் நாட்டுமக்களுக்கும் உலகிற்கும் வெளிப்படுத்தவேண்டும். மௌனம் காத்து இவ்வநியாயத்திற்குத் துணைபுரியும் தமிழ் அரசியல் வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்பதனையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். வளமான இடத்தில் பிறந்து வாழ்ந்தது சம்பூர் மக்கள் செய்த குற்றமா? புலிகளின் கட்டுப்பாடுப்பகுதியில் அவர்கள் வாழ்ந்தது யார் செய்த குற்றம்?
சம்பூர் மக்களின் துயரம், அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தமிழ் அரசியல் வாதிகள்
சம்பூர் பிரதேச மக்கள் 1983 தொடக்கம் 2006 வரைக்கும் யுத்த சூழ்நிலைக்குள் வாழ்ந்த போதும் அவர்கள் ஒருபோதும் இடம்பெயர்ந்திருக்கவில்லை. ஆனால் 2006 ஆல் இடம் பெற்ற வான்தாக்குதலைத் தொடர்ந்து முதன்முதலாக இடம்பெயர்ந்த சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பிரதேச மக்கள் இன்றுவரைக்கும் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைபறிச்சான் ஆகிய பிரதேங்களில் அமைந்துள்ள அகதிமுகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அரச அதிகாரிகள் சிலர் அம்மக்களை அணுகி இறால்குழி அல்லது இத்திக்குளம் ஆகிய இடங்களில் குடியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். சம்பூர் பிரதேசம் விவசாயம், கால்நடை, தோட்டப்பயிர்ச்செய்கை மற்றும் கடற்றொழில் போன்றவற்றுக்கு மிகவும் பொருத்தமான பிரதேசமாகும். ஆறு அடி ஆழத்தில் நிலக்கீழ் நீரைக் கொண்டுள்ள மிகவும் வளமான பிரதேசமாகும். அரச அதிகாரிகள் முன்மொழிந்த இறால்குழி அல்லது இத்திக்குளம் ஆகிய பிரதேசங்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். இறால்குழிப் பிரதேசம் மாரி காலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் சேற்று நிலப்பகுதியாகும். இங்கு விவசாயம் செய்வதற்குரிய ஒரு சில நூறு ஏக்கர் நெற்காணிகள் கூட இல்லாத போது ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளைக் கொண்ட மக்கள் எவ்வாறு அங்கு குடியேறுவது? இத்திக்குளம் பிரதேசத்தில் நிலத்தடி நீர் 40-50 அடிகளுக்குள் கிடைப்பதே கடினமானதாகும். குடிநீருக்கே அல்லற்படும் அப்பிரதேசத்தில் விவசாயமும் செய்யமுடியாது. கடற்றொழிலும் செய்ய முடியாது. பத்தாயிரம் ஏக்கர் சம்பூர் காணிகளை வேலிபோட்டு அடைந்து வைத்து விட்டு வேலிக்கப்பால் கருங்கற் பாறை நிலங்களிலும் சேற்று நிலங்களிலும் மக்கள் குடியேறலாம் என அரசு எந்த நியாயாதிக்கத்தினடிப்படையில் கூறுகின்றது? பத்தாயிரம் ஏக்கர் காணிகளை கொண்டிருந்த மக்களுக்கு ஒரு சில நூறு ஏக்கர் காணிகளை மூதுரிரின் எந்தப்பகுதியிலும் பெற முடியாத நிலையில் எந்த நியாயாதிக்கத்தின் படி அரசு மாற்றுக்காணிகள் வழங்கப்படும் எனக் கூறுகின்றது? இலங்கை அரசாங்கத்திற்கு இலங்கையில் எங்காவது சொந்தமாக ஒரு சில நூறு ஏக்கர் நெற்காணிகளாவது உண்டா? அவ்வாறிருக்கையில் 2500 ஏக்கர் நெற்காணிகளை எங்கிருந்து பெற்று சம்பூர் மக்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகின்றது?.
தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச டெயிலி மிரர் பத்திரிகைக்கு 01.11.2007அன்று வழங்கியுள்ள பேட்டியில் சம்பூர் பிரதேசத்திலிருந்து ஒரு தனிநபரேனும் வெளியேற்றப்படவில்லை என்றும் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயினர் தங்கள் பாதுகாப்புக்காக சில குடும்பங்களை சம்பூர் பகுதியில் வைத்திருந்தாகக் கூறியுள்ளதுடன் இக்குடும்பங்கள் அப்பிரதேசத்தில் தமது சொத்துரிமைய நிரூபிக்க முடியாது எனவும் அவர்களால் அங்கு ஒரு வீட்டையேனும் காட்ட முடியாது என்றும் கூறியுள்ளார். இது முற்றுமுழுக்க ஆதாரமற்ற கதையாகும். சம்பூரில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சம்பூர் மகாவித்தியாலயம் இலங்கை சுதந்திமடைவதற்கு முன்னரேயே ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக இயங்கியது என்பதையும் 1965 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் மர்கூம் அப்துல் மஜீத் அவர்களின் முன்முயற்சியினால் மூதூர் கிழக்கிலேயே முதன் முதலாக மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது என்பதனையும் அரசாங்கத்திலுள்ளோர் கல்வியமைச்சின் ஆவணங்களைப் புரட்டிப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் தொடங்கிய பின் இலங்கை இராணுவத்தினர் பல தடவைகள் சம்பூரில் முகாமிட்டிருந்தனர். 1987-1989 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். 1990 களின் முதற்பகுதியில் சம்பூரில் முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு கப்டனாக இருந்து தற்போது மேஜர் ஜெனரலாக இருக்கும் பேர்ட்டி பெரேரா அவர்கள் சம்பூர் பிரதேசத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். அவர் சம்பூரைப்பற்றி அதிகம் கூறக்கூடியவர். ஆகவே சம்பூரில் மக்கள் வாழவில்லை என அரச தரப்பின் உயர்மட்டம் கூறுவது அடிப்படையற்றதாகும்.
இது இவ்விதமிருக்க தமிழ் அரசியல் வாதிகளின் சம்பூர் தொடர்பான அரசியல் நிலைப்பாடு துரோகத்தனமானதாகும். இந்தியா சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் கதை வெளியானதுடன் சம்பந்தன் அவர்களின் இரட்டை வேடம்அம்பலமாகத் தொடங்கியது. சுரேஸ் பிமேச்சந்திரன் மற்றும் அரியநேந்திரன் ஆகிய இரண்டு தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வருகின்றனர். சம்பூர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திருவாளர் சம்பந்தன் அவர்களின் சம்பூர் தொடர்பான நிலைப்பாடு சம்பூர் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. சம்மந்தன் அவர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்குக் கேட்டு ஜனாதிபதி தோர்தல் காலத்திலும், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் தனக்கு வாக்குக்கேட்டும் சம்பூர் பிரதேச மக்களை அகதிமுகாம்களில் சென்றுசந்தித்தார். இந்தியாவுடன் பேசி எப்படியும் மக்களைக் குடியேற்றுவதாக வாக்குறுதியளித்தார். அதன்பின் அம்மக்களை எட்டிக்கூடப்பார்க்காமல் இந்தியாவே கதியென தஞ்சமடைந்து விட்டார். தனக்கு வாக்களித்த மக்களை மிகமுக்கியமான காலத்தில் கைவிட்டு அரசியலில் இருந்து ஒய்வு பெறுவாரேயானால் வரலாற்றுப் பழியில் இருந்து அவர் தப்பமுடியாது. அவர் தற்போது முதுமையடைந்து விட்டதாகவும் நோய்வாய்ப்பட்டு இந்தியாவில் ஓய்வெடுப்பதாகவும் கதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறெனில் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்ட போது தனக்கு 80 வயது நெருங்குவதனையும் தான் செயற்படு அரசியலில் ஈடுபட முடியாது என்பதனையும் அவர் அறியாமல் இருந்தாரா? அவர் மூப்படைவதும் அவர் ஓய்வெடுப்பதும் அவரது சொந்தப் பிரச்சினைகள். அதற்காக அவர் தன்னைத் தெரிவு செய்த மக்களின் தலைவிதியோடு விளையாடலாமா? தற்போது கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை அவர் தக்கவைத்துக் கொண்டு திருமலை மாவட்டத்தில் செயற்படு அரசியலில் ஈடுபடக்கூடிய ஒருவரை தெரிவு செய்து மக்களின் தேவைகளை அறிந்து பணிசெய்யுமாறு அவரால் பணிக்க முடியாதா? ஏனெனில் அவர் இன்று வரை பாராளுமன்றத்தில் சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினை பற்றி தனியாக விவாதித்து ஒரு நியாமான தீர்வினைப் பெற்றுத்தர முன்வரவில்லை. இன்று வரையும் அவர் சம்பூர் மக்களின் பிரச்சினையினை சட்ட ரீதியாகவும் அணுகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவே தமிழர்களுக்கு இனி எல்லாம் எனக்கருதும் இவர்; இந்தியாவிடம் சரணாகதி அரசியல் நடத்துவது தமிழ் மக்களுக்கு அழிவினையே பெற்றுத்தரும் என்பதை ஏன் உணர மறுக்கின்றார்;?
இன்று இம்மக்களைப் பாதுகாக்கக்கூடிய ஆற்றல் சம்பூர் பத்திரகாளி அம்பாளுக்கு மட்டுமே உள்ளது.
யுத்தகாலத்தில் பெருந்துன்பங்களை அனுபவித்து ஓரளவேனும் சந்தோசமாக தமது பிரதேசத்தில் வாழ்ந்த இப்பிரதேச மக்கள் தற்போதைய சமாதான காலத்தில் தாம் பிறந்து வாழ்ந்த பூமியைப் பறிகொடுத்துவிட்டு அரசியல் அநாதைகளாக ஏதிலிகளாக நிற்கின்றனர். சம்பூர் மக்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது போல்; மிகவும் அருள் சக்திபொருந்திய சம்பூர் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயமும் குண்டுத் தாக்குதலால் முற்றாக நாசமாக்கப்ட்டுள்ளது. மக்களின் துயரத்தினை அம்பாளும் பகிர்ந்து கொண்டுள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர். சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வருடந்தோறும் இடம்பெறும் கேதார கௌரி விரதம் மிகவும் சிறப்பானது. பெண்கள் 21 நாள் விரதமிருந்து தீபாவளி தினத்தன்று காப்புக்கட்டுவது வழக்கமாகும். ஆனால் 2006 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் இப்பிரதேசப் பெண்கள் 21 நாள் விரதமிருந்தாலும் சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில்தான் காப்புக்கட்டுவோம் என உறுதிகொண்டு ஐந்து வருடங்களாகப் பழிகிடக்கின்றனர். மனிதர்கள் துன்பமிழைக்கும் போது மக்களைப் பாதுகாக்கும் வல்லமை தெய்வத்திற்கு மட்டுமே உள்ளது என்பது மெய்ம்மையாகும். இன்றுள்ள நிலைமையில் சம்பூர் பிரதேச மக்களை சம்பூர் பத்திரகாளி அம்பாளைத் தவிர வேறுயாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மையாகும். சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மணியோசை என்று ஒலிக்குமோ அன்றே இம்மக்களின் பிரச்சினையும் தீரும். அதுவரையில் எல்லாம் வல்ல அம்பாளிடம் நீதி கேட்டுப் பிரார்த்திப்போமாக.
-நன்றிகள் திரு. எல் சிவலிங்கம்.-



ஏற்காடு மலைக் கிராமத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன்?


இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் பெயரில் சாப்பாட்டுக் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.
தம்பி பிரபாகரன் உணவகம் என்பது இதன் பெயர்.
புலிகள் இயக்க சீருடையில் பிரபாகரன் கடையின் பெயர்ப் பலகையில் தோன்றுகின்றார்.
உறுமும் புலிச் சின்னமும் அருகில் காட்சி கொடுக்கின்றது.

Sunday, July 31, 2011

மில்லரின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலைக் கட்டடம் இடிக்கப்படுகிறது


தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற் தற்கொலைப் போராளி கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்திருந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் கட்டடம் யாழ். ஆளுநரின் பணிப்பின் பேரில் தற்போது இடித்து அகற்றப்படுகிறது.
இந்தப் பாடசாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த வடமாகாண ஆளுநரும் 2006 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுவரை யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியவரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, விடுதலைப்புலிகளை நினைவுகூரத்தக்க வகையில் அமைந்துள்ள சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கூற்றுக்கமைவாக, இவ்வாறான கட்டடங்கள் பாடசாலையில் இருக்கக் கூடாது. அவற்றை உடனடியாக இடித்து அகற்றுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
தாக்குதலில் சேதமடைந்த பாடசாலைக் கட்டடம் மில்லரின் நினைவாக அப்படியே இருந்தது.
தற்போது ஆளுநரின் உத்தரவுக்கு அமைய ஆளுநரினால் வழங்கப்பட்ட நிதியில் மேற்படி கட்டடம் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் நேற்று முன்தினம் முதல் இடிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, யாழ். குடாநாட்டிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னம் எதுவுமே இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் மயானங்கள், நினைவுத் தூபிகள்,  கல்லறைகள் மற்றும் நினைவுப் பூங்காக்கள் என்பன  இடித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தடுமாறும் சிவாஜிலிங்கமும்,தடுமாற போகும் தமிழ்தேசிய கூட்டமைப்பும்?

தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று வடக்கு கிழக்கில் தமிழர் இருப்பை உறுதி செய்ததுஇது யாவரும் அறிந்ததே.தேர்தல் காலப்பகுதியில் அதாவது தேர்தலுக்கு முன்பு சில மாற்றங்கள் நடந்தன அதாவது முன்பு பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட "தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பு" என்ற கட்சி கலைக்கப்பட்டு அவருடன் இருந்த எம்பி சிறிகாந்தாவும் அவர்கள் முன்பு அங்கத்துவம் வகித்த ரெலோவுடன் இணைந்துகொண்டனர்.இதன் பின்பு வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் தேசிய மாநாட்டில் உரைநிகழ்த்திய சிவாஜிலிங்கம் சொன்னார் "நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் சேர்ந்து நமக்கான அரசியல் உரிமைகளை பெறவேண்டும்",இதையும் நாம் மறந்துவிடவில்லை.தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு "தேசியம்,தாயகம் என்பவற்றுடன் முள்ளிவாய்க்கால் அவலங்கள்,மீள்குடியேற்றம்,முன்னாள் போராளிகளின் விடுதலைக்கு உதவுதல்"என்ற கோரிக்கைகளுடன் களத்தில் இறங்கினார்கள் மக்களோ அமோக ஆதரவுடன் வெற்றி பெற செய்தார்கள்,ஆனால் இன்றோ நடப்பது என்ன?சிவாஜிலிங்கம் இப்போ தடுமாறுகின்றார்,இதோ அவரின் கோரிக்கைகள் 
 கடந்த 28.07.2011 திகதியிட்டு வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் - 2011 எனத் தலைப்பிட்டு, வல்வெட்டித்துறை நலன்விரும்பிகள் என சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 11 பேர் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறையில் இருந்து தொலைநகல் மூலம் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை.சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :
1. முன்னுரிமை வாக்கின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு மட்டுமே அன்றி தலைவர் உபதலைவர் தெரிவுக்கு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
2. நியமனப்பத்திரம் தயாரித்த வேளை 26.01.2011 ல் திரு சுமந்திரன் பா.உ முன்னிலையில் தங்கள் திரு.அனந்தராஜாவின் கேள்விக்கு பதிலளிக்கையில் முன்னுரிமை வாக்குகளை மட்டும் கருத்தில் கொள்ளாது வேறு பல அம்சங்களும் சேர்த்தே பரிசீலிக்கப்படும் எனப் பதிலளித்தமையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
3. இந் நிலையில் திரு.ந. அனந்தராஜ் உள்ளிட்ட எமது உறுப்பினர்கள் மத்தியில் சுழற்சி முறையில் தலைவர், உப தலைவர் பதவிகள் பகிர்ந்து வகிக்கும் திட்டத்தினை அமுல்படுத்த ஒரு மனதாக தீர்மானித்துள்ளோம்.
4.இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களும் போட்டியிட்ட வேட்பாளர்களும் மற்றும் வல்வெட்டித்துறை நலன் விரும்பிகளும் ஒருமித்த கருத்துடன் சிவாஜிலிங்கம் முதல் ஒரு ஆண்டும் அனந்தராஜ் அடுத்த இரு ஆண்டுகளும் குலநாயகம் ஒரு ஆண்டும் தலைவர் பதவியை வகிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
5. உப தலைவார் பதவி சதீஸ் இராமச்சந்திரன் (தெரிவாகதவர்)  ஜெயராஜ், மயூரன், ஜெயதீஸ் ஆகியோருக்கிடையில் 4 ஆண்டுகளும் பகிர்ந்து அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
6. 4ம்,5ம் பந்திகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்த ஏதுவாகவும் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் தற்காலிக ஏற்பாடாக தலைவராக க.ஜெயராஜா வையும் உப தலைவராக க.சதீஸ் ஐம் நியமித்து தேர்தல் ஆனையாளருக்கு அறிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
7. 6ம் பந்தியில் குறிப்பிட்டுள்ள குறைந்த பட்ச கோரிக்கைகளையும் ஏற்கபடாது விடத்தில் எமது கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் நகரசபை நிர்வாகத்துடன் ஒத்துழைக்காது செயற்படுவதன் மூலம் நகரசபை செயற்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.
என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அவலங்களை முன்னிறுத்தி வாக்குகேட்ட சிவாஜிலிங்கம் தற்பொழுது பதவிக்காக ஆசைப்படுகிறாரா?  இந்த நேரத்தில் இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும் கூட்டமைப்பு எம்பியான சுமந்திரனும் அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் தெரிவித்த கருத்துக்களும் அண்மையில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது,ஆனால் இவரது கருத்துக்களுக்கு இன்றுவரை கூட்டமைப்பு உயர்மட்ட உறுப்பினர்களால் உரிய நடவடிக்கைகளோ அல்லது மக்களுக்கான தெளிவு படுத்தல்களோ இல்லை என்பதே கவலையான செய்தி.ஒரு எம்பி கூறியிருந்தார் "சுமந்திரனின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்தே தவிர கூட்டமைப்பின் கருத்தல்ல" அப்படியாயின் சுமந்திரன் கூட்டமைப்பு உறுப்பினர் இல்லையா?அல்லது அவரும் கூட்டமைப்புக்கு கட்டுப்படவில்லையா? எனவே இவற்றுக்கு எல்லாம் நாம் விடைகான  கூட்டமைப்பு தலைவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்போகும் கருத்துக்கள்/எடுக்கப்போகும் நடவடிக்கைகள்தான் பதில் சொல்லும்.


Sunday, July 24, 2011

தமிழீழம் தொடர்பாக முகப்புத்தகத்தில் (Facebook) கணக்கு வைத்திருப்பவர்களின் முக்கிய கவனத்திற்க்கு!


ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம்.
இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.

இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விபரங்கள் அறிந்த பின்னர் நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை கைது செய்வார்கள் பின்பு உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இலங்கை தமிழர்கள் பேஸ்புக்கில் உங்களுடைய முகவரியை போலியானதாக பதிவு செய்யவும்.
இதேவேளை உங்கள் பேஸ்புக் கணக்கில் பொய்யான பெயரோ அல்லது பொய்யான முகவரியோ இட்டிருந்தால் அல்லது நீங்கள் பேஸ்புக்கில் முகம் தெரியாத நண்பர்களுடன் உரையாடும் போது உங்கள் தொடர்பான உண்மையான பெயரையோ முகவரியையோ தெரிவிக்காமல் இருந்தால் எந்தவிதமான பிரச்சினையும் வராது.

Wednesday, July 13, 2011

யாகூ (yahoo) இணையத்தினூடாக 88 இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக் கணிப்பு! உங்கள் வாக்கை உடனடியாக அளியுங்கள்.


இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக இன்று நடைபெற்று வருகிறது.
இக் கருத்துக்கணிப்பில் நாங்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Today's Poll
Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?

1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)

2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)

3. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பவும். (Send them home)

4. எனக்குத் தெரியாது. (I don't know)

போன்ற விடையங்களே இக்கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கருத்துகணிப்பானது யாகூ இணையத்தில் ஒரு சிறிய பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவான தமிழர்களின் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.

இதன் காரணமாக துரதிஸ்டவசமாக இந்த நிமிடம் வரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்ற கருத்திற்கே அதிகமான வாக்காக 82% காணப்படுகிறது.

எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/  எனும் பகுதியை அழுத்தி அதனூடாக அக்கருத்துக்கணிப்பில் இலக்கம் இரண்டில் உள்ள Negotiate with Australia or Canada என்பதற்கு உங்கள் வாக்குகளை அளித்து நடுக்கடலில் தத்தளிக்கும் எமது அன்பு உறவுகளை விரைந்து காப்பாற்றுங்கள்.
தனி நபர்களாகவும், நீங்கள் சார்ந்த அமைப்புக்கள் சார்ந்தும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் வேற்றினத்தவர்களுக்கும் தெரியப்படுத்தி இக்கருத்துக்கணிப்பில் Negotiate with Australia or Canada எனும் பகுதிக்கு வாக்குகளை அதிகரிக்க செய்து உயிர்த் தஞ்சம் கோரி நிற்கும் எம் தாயக உறவுகளுக்கு ஒரு நல்ல வாழ்வை அளியுங்கள்.

நேற்றைய தினம் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் "உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவ உங்கள் அமைப்புக்கள் சார்ந்து விரைந்து செயற்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததையும், அதன் காரணமாக பல அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் என பலரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கத்தினூடாக அக்கப்பலில் இருக்கும் உறவுகளுடன் உரையாடி அவர்கள் தொடர்பான விபரங்களை பெற்ருக்கொண்டதோடு அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Friday, July 8, 2011

யூலை 23 உள்ளாட்சித் தேர்தலில் த,தே,கூட்டமைப்பை ஆதரியுங்கள்

சிங்கள அரசினால் தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் எதிர்வரும் யூலை 23 இல் நடைபெற இருக்கிறது. வட - கிழக்கில் மொத்தம் 25 உள்ளாட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டம் 

(1) வல்வெட்டித்துறை நகர சபை (2) பருத்தித்துறை நகர சபை (3) சாவகச்சேரி நகர சபை (4) காரைநகர் பிரதேச சபை (5) ஊர்காவத்துறை பிரதேச சபை
(6) நெடுந்தீவு பிரதேச சபை (7) வேலணை பிரதேச சபை (8) வலிகாமம் மேற்கு பிரதேச சபை (9) வலிகாமம் வடக்கு பிரதேச சபை (10) வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை (11) வலிகாமம் தெற்கு பிரதேச சபை (12) வலிகாமம் கிழக்கு பிரதேச சபை (3) வடமராச்சி தென்மேற்கு பிரதேச சபை (14) பருத்தித்துறை பிரதேச சபை (15) சாவகச்சேரி பிரதேச சபை (16) நல்லூர் பிரதேச சபை.

கிளிநொச்சி மாவட்டம் 

(1) பச்சிலைப்பள்ளி பிரதேச சபை (2) கராச்சி பிரதேச சபை (3) பூநகரி பிரதேச சபை.

திருகோணமாலை மாவட்டம்

(1) கந்தளாய் பிரதேச சபை (2) குச்சவெளி பிரதேச சபை (3) திருகோணமலை நகர பிரதேச சபை (4) சேருவில பிரதேச சபை

அம்பாரை மாவட்டம் 

(1) காரைதீவு பிரதேச சபை (2) திருக்கோயில் பிரதேச சபை

கடந்த மார்ச்சு 17 இல் வட - கிழக்கில் உள்ளாட்சி சபைகளுக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 12 சபைகளிலும் வெற்றிபெற்றது. உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்மக்கள் அடித்தள ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க முடியும்.

வட - கிழக்கில் நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பலத்த தோல்வியைச் சந்தித்த ஆளும் கட்சி இந்தத் தேர்தலில் தமிழ்க் கைக்கூலிகளின் ஆதரவோடு எப்படியும் வென்றுவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளது. வடக்கில் தேர்தல் பரப்புரைக்குப் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பஸில் இராசபக்சே, நாமல் இராசபக்சே, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், சுசில்பிரேமஜெயந்த, மைத்திரபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, திஸ்ஸ கரலியத்த, ஜகத் புஸ்பகுமார, மஹிந்தானந்த அளுத்கமகே, துணை அமைசர் ஹிஸ்புல்லா ஆகியோருடன் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு (யூலை 03) காலை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பஸில் இராபச்சே "பன்னாட்டுச் சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் எமது அரசுடன் தான் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக நாம் உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

எனவே வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி ஆட்பலம், பணபலம், அதிகார பலம், இராணுவ பலம் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஆளும் சிங்கள - பவுத்த பேரினவாதிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிய தலையிடியாக இருக்கிறது. "அரசைக் குழப்பும் கட்சிகளாக தெற்கில் ஜேவிபியும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்" இருக்கிறதாக அமைச்சர் பஸில் இராசபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.

வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்று போர்க்காலத்தில் கூறிய மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் வழங்கும் காணி மற்றும் காவல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.

"யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது" என கபே (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது.

வடக்கும் கிழக்கும் இராணுவ - சிங்கள - பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள், பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது. அதன் வெளிப்பாடாகவே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூட்டமைப்பை தோற்கடித்து உள்ளாட்சி சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு அதிதீவிர முயற்சி செய்கிறது.

யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் கடந்த யூன் 16 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர் ஆயுதங்களோடு திடீரெனப் புகுந்து இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது தெரிந்ததே. யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை இல்லை என்பதற்கு இந்தத் தாக்குதல் சாட்சி பகருகிறது.

கடந்த தேர்தல்களில் எமது மக்கள் எதற்கும் விலை போக மாட்டார்கள், எந்தப் பயமுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டார்கள் என்பதைத் துலாம்பரமாகக் காட்டியுள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் எமது மக்கள் சிங்கள - பவத்த இனவாதத்தைக் கக்கும் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் அதன் தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் செமபாடம் புகட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு காலத்தில் சிங்கள - பவுத்த - இராணுவ மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக வி.புலிகள் காப்பரணாக விளங்கினார்கள். இன்று அந்தப் பொறுப்பு ததேகூ இன்தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. முன்னா நடந்த தேர்தல்களில் ததேகூ இன் வெற்றிக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் குறிப்பாக கனடிய தமிழ்மக்கள் பாரிய பங்களிப்பைச் செய்துளார்கள். தொடர்ந்து அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள் என நம்புகிறோம்.

ததேகூ தோற்கடித்துவிட்டால் தமிழ்மக்களை அடக்கி ஆளுவது எளிதாகிவிடும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு நினைக்கிறது! ததேகூ க்கு எங்கள் ஆதரவு தேவை.
�புலம்பெயர் தமிழ்த் தேசிய நலன் விரும்பிகள்